Karunai Kilangu Chutney
நாம் எப்போது இட்லி மற்றும் தோசைக்கு அதிகமாக சட்னி வகையினை தான் சைடிஸ்ஸாக எடுத்துக் கொள்வோம். இந்த சட்னி வகைகளில் பல வகைகள் இருந்தாலும் கூட நாம் எப்போதும் வெங்காயம், தக்காளி மற்றும் புதினா, பூண்டு சட்னியினை தான் அதிகமாக சாப்பிடுகிறோம். ஆனால் இத்தகைய சட்னி இல்லாமல் இன்னும் நாவிற்கு சுவையாகவும், ஆரோக்கியம் அளிக்கக்கூடிய சட்னி வகைகளும் இருக்கிறது. அதனால் இன்று கருணைக்கிழங்கு சட்னி எப்படி வெறும் 10 நிமிடத்தில் செய்து அசத்துவது என்பதை தான் செய்முறை விளக்கத்துடன் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
கருணைக்கிழங்கு சட்னி:
- கருணைக்கிழங்கு- 1 கப்
- பெரிய வெங்காயம்- 1
- தக்காளி- 1
- காய்ந்த மிளகாய்- 3
- பச்சை மிளகாய்- 2
- கடுகு- 1/2 ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு- 2 1/4 ஸ்பூன்
- புளி- சிறிதளவு
- இஞ்சி- சிறிதளவு
- கறிவேப்பிலை- தேவையான அளவு
- உப்பு- தேவையான அளவு
- எண்ணெய்- தேவையான அளவு
காலை உணவுக்கு ஏற்ற சூப்பரான கொய்யா சட்னி இப்படி செஞ்சி பாருங்க
கருணைக்கிழங்கு சட்னி செய்முறை:
முதலில் எடுத்துவைத்துள்ள கருணைகிழங்கினை சுத்தமாக நறுக்கி அதன் மேலே உள்ள தோளினையும் சுத்தம் செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு அந்த கிழங்கில் தண்ணீர் சேர்த்து நன்றாக வேக வைத்து விடுங்கள்.
கருணை கிழங்கு நன்றாக வெந்த பிறகு அதனை கைகளால் மசித்து விடுங்கள். பின்பு அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடானதும் எடுத்துவைத்துள்ள பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், இஞ்சி, உளுத்தம் பருப்பு 2 ஸ்பூன் சேர்த்து நன்றாக வதக்கி ஆற வைத்து கொள்ளவும்.
இப்போது சிறிதளவு புளியினை தண்ணீரில் ஊறவைத்து புளிக் கரைசல் தயாரிக்கவும். அதன் பிறகு வதக்கிய பொருளை மிக்சி ஜாரில் சேர்த்து நன்றாக பேஸ்ட் போல அரைக்கவும்.
கடைசியாக அடுப்பில் ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் அதில் எடுத்துவைத்துள்ள கடுகு, 1/2 ஸ்பூன் உளுத்தம் பருப்பு சேர்த்து பொரிய விடுங்கள்.
பின்பு அதனுடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி மற்றும் உப்பு சேர்த்து நன்றாக பொன் நிறமாக வரும் வரை வதக்கி கொள்ள வேண்டும். இவை அனைத்தும் வதங்கியவுடன் மசித்து வைத்துள்ள கருணைக்கிழங்கு மற்றும் அரைத்த பேஸ்ட்டினை சேர்த்து 2 நிமிடம் கலந்து கறிவேப்பிலை தூவி இறக்கினால் போதும் கருணைக்கிழங்கு சட்னி தயார்.
தயார் செய்து வைத்துள்ள கருணைக்கிழங்கு சட்னியை இட்லி, தோசை, சப்பாத்தி என தொட்டு சாப்பிடலாம்.
ஒரு நிமிடத்தில் இட்லி தோசைக்கு சூப்பரான சட்னி..! வறுத்து அரைக்க வேண்டியதில்லை
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |