Karuveppilai Kothamalli Chutney in Tamil
நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் அதிகம் சாப்பிடுவது இட்லி தோசை தான். தினமும் காலை உணவாகவும் இரவு உணவாகவும் சாப்பிட்டு வருகிறோம். இந்த இட்லி தோசைக்கு கார சட்னி, தேங்காய் சட்னி, சாம்பார், குருமா போன்றவற்றை சைடிஸ் ஆக செய்து இருப்போம். அதிலும், அதிகமாக செய்வது தேங்காய் சட்னியும் கார சட்னியும் தான். இதனையே தினமும் சாப்பிட்டு சிலருக்கு இட்லி தோசை என்றாலே வெறுப்பாகிவிடும். இதனாலே பலபேர் இட்லி தோசையை வெறுக்கிறீர்கள். எனவே அப்படி இல்லாமல் வழக்கமாக செய்யும் சட்னியை விட கொஞ்சம் Different ஆக இந்த சட்னியை செய்து பாருங்கள்.. அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஓகே வாருங்கள், கருவேப்பிலை கொத்தமல்லி சட்னி செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
கருவேப்பிலை கொத்தமல்லி சட்னி:
தேவையான பொருட்கள்:
- கொத்தமல்லி – 1 கப்
- கருவேப்பிலை – 1 கப்
- வெங்காயம் – 1
- தக்காளி – 1
- பச்சை மிளகாய் – 2
- இஞ்சி – 1 சிறிய துண்டு
- பூண்டு – 5 பற்கள்
- எண்ணெய் – தாளிக்க தேவையான அளவு
- பெருங்காயம் தூள் – 1/4 ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- கடுகு – 1 ஸ்பூன்
- உளுந்தம்பருப்பு – 1/2 ஸ்பூன்
- கறிவேப்பிலை – 1 கொத்து
- காய்ந்த மிளகாய் – 2
செய்முறை:
ஸ்டேப் -1
முதலில் தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்கி எடுத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் -2
இப்போது, அடுப்பில் ஒரு கடாயை வைத்து, அதில் நறுக்கிய வெங்காயம், வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு ஆகியவற்றை சேர்த்து வதக்கி கொள்ளுங்கள்.
ஸ்டேப் -3
இவை லேசாக வதங்கியதும், இதனுடன் கொத்தமல்லி இலைகள் மற்றும் கருவேப்பிலையை சேர்த்து வதக்கி கொள்ளுங்கள்.
ஸ்டேப் -4
அனைத்து பொருட்களும் நன்கு வதங்கியதும், அடுப்பை ஆஃப் செய்து சிறிது நேரம் ஆறவைத்து எடுத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் -5
அடுத்து, ஒரு மிக்ஸி ஜாரில் இந்த பொருட்களை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து சட்னியாக அரைத்து எடுத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் -6
இறுதியாக, அடுப்பில் ஒரு தாளிப்பு கரண்டியை வைத்து எண்ணெய் சேர்த்து கொல்லுங்கள். எண்ணெய் காய்ந்ததும், அதில் கடுகு, உளுந்தப்பருப்பு மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து ஊற்றினால் சுவையான கொத்தமல்லி, கருவேப்பிலை சட்னி ரெடி..!
இனி இட்லி தோசைக்கு இந்த சட்டினி அரைச்சி சாப்புடுங்க 2 இட்லி அதிகமாக சாப்புடுவிங்க
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள்!!! |