ருசியான கறிவேப்பிலை ஊறுகாய் செய்வது எப்படி…!

Curry Leaves Pickle Recipe in Tamil

Curry Leaves Pickle Recipe in Tamil 

வணக்கம் நண்பர்களே…! அனைவரது வீட்டிலும் பல வகையான தொட்டுக்கை சமைத்து சாப்பிட்டாலும் அவர்களுக்கு முதலில் தோன்றுவது ஊறுகாய். பலரும் ஊறுகாயை அதிகம் விரும்பி சாப்பிட்டு வருகிறார்கள். அதிலும் இன்றைய காலத்தில் திருமண மற்றும் விசேஷங்களில் இலைகளில் ஊறுகாய் வைத்து பரிமாறி  வருவது வழக்கமாகி விட்டது . இஞ்சி பூண்டு ஊறுகாய், மாங்காய் ஊறுகாய், நெல்லிக்காய் ஊறுகாய், பூண்டு ஊறுகாய் ,எலுமிச்சை ஊறுகாய் போன்ற ஊறுகாய் இருந்தாலும் புதிதாக ஊறுகாய் ஒன்றை பற்றி பார்க் போகிறோம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

தேவையான பொருட்கள் : 

  • கறிவேப்பிலை – 3 கைப்பிடி அளவு 
  • எண்ணெய்-  100 கிராம்
  • ஊறவைத்த புளி – 200 கிராம்
  • உப்பு – தேவையான அளவு
  • கடுகு – சிறிதளவு
  • வெள்ளை உளுந்து – சிறிதளவு
  • கடலை பருப்பு – சிறிதளவு
  • பெருங்காயம் – சிறிதளவு
  • பூண்டு தோல் – சிறிதளவு
  • மிளகாய் தூள் – தேவையான அளவு

10 நிமிடத்தில் சுவையான நெல்லிக்காய் ஊறுகாய் ரெடி

கறிவேப்பிலை ஊறுகாய் செய்முறை : 

 கருவேப்பிலை ஊறுகாய் செய்வது எப்படி

ஸ்டெப்: 1 

முதலில் மூன்று கைப்பிடி அளவு கருவேப்பிலையை எடுத்து அலசி கொள்ளவும். ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து பாத்திரம் சூடான பிறகு கருவேப்பிலையை போடவும். அதனுடன் எண்ணெயை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். வதக்கிய பிறகு இலைகள் சுருண்டு வரும் நிலை ஏற்படும். அப்போது கறிவேப்பிலையை அடுப்பை விட்டு இறக்கி தட்டில் சேர்த்து ஆற விடவும்.

பிறகு அதே பாத்திரத்தில் ஊறவைத்த  200 கிராம் புளியை கெட்டியாக சேர்த்து நன்றாக வதக்கவும்.

ருசியான சிக்கன் ஊறுகாய் செய்வது எப்படி தெரியுமா ?

ஸ்டெப்: 2

அடுத்து மிக்சியை எடுத்து கொண்டு வதக்கி வைத்த கருவேப்பிலை மற்றும் புளி, தேவையான அளவு உப்பு சேர்த்து அரைக்கும் போது எண்ணெய் விட்டு தான் அரைக்க வேண்டும்.

பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் காய்ந்தவுடன் கடுகு, வெள்ளை உளுந்து மற்றும் கடலை பருப்பு , போட்டவுடன் பொரிய தொடங்கி விடும். இதனுடன் ஊறுகாய் மனமாக இருப்பதற்கு பெருங்காயத் தூளை சிறிதளவு,  பூண்டு தோலை சேர்த்து வதக்கி கொள்ளவும். பின் இதில் காரத்திற்கு தகுந்தாற் போல் மிளகாய் தூளை சேர்த்து கலந்து விடவும்.

ஸ்டெப்: 3

அரைத்து வைத்த கருவேப்பிலையை அடுப்பில் உள்ள பொருளுடன் சேர்த்து நன்றாக கலந்து விடவும். அதில் எண்ணெயை ஊற்றி வதக்கி கொண்டே இருக்கவும். பிறகு ஊறுகாய் பொன்னிறமாக வரும். இந்த நிலை வரும் போது அடுப்பை அணைத்து விடவும். இது  எத்தனை நாட்கள் ஆனாலும் கெட்டுப்போகாது. அருமையான  மணமணக்கும் கருவேப்பிலை ஊறுகாய் ரெடி…

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>  சமையல் குறிப்புகள்