நாகூர் கட்டு சோறு செய்வது எப்படி? – Kattu Soru Recipe in Tamil
ஹை பிரண்ட்ஸ் வணக்கம்.. இன்று நாம பார்க்க இருப்பது குக்கரில் ஈஸியா கட்டு சோறு மற்றும் அதனை தொட்டு கொள்வதற்கு முட்டை வறுவல் செய்வது எப்படி என்று தான் பார்க்க போகிறோம். இந்த கட்டு சோறு நாகூர், காரைக்கால், வேளாங்கண்ணி பகுதிகளில் மிகவும் பிரபலமான உணவாகும்.
இப்பொழுது பெய்யும் மழைக்கு நாவிற்கு இதமாக இந்த கட்டு சோறு மற்றும் அதற்கு ஏற்ற முட்டை வறுவல் செய்து சாப்பிட்டால் மிகவும் நன்றாக இருக்கும். மேலும் இதனை வீட்டில் இருக்கும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பார்கள். சரி வாங்க இந்த கட்டு சோறு பிளஸ் முட்டை வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
தேவையான பொருட்கள்:
- எண்ணெய் – 1½ டேபிள் ஸ்பூன்
- அரிசி – ஒரு கப்
- கடுகு – ஒரு டீஸ்பூன்
- கடலை பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன்
- கருவேப்பிலை – இரண்டு கொத்து
- காய்ந்த மிளகாய் – 4
- பூண்டு – 10 பல்
- மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன்
- தனி மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
- பொடித்த சீரகம் – ½ டீஸ்பூன்
- பொடித்த மிளகு – ½ டீஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- தேங்காய் பால் – ஒரு கப்
- புளிக்கரைத்த நீர் – ¼ கப்
- தண்ணீர் – 1¾ கப்
கட்டு சோறு செய்முறை – Kattu Soru Recipe in Tamil:
சாப்பாட்டு அரிசி ஒரு கப் எடுத்துக்கொள்ளுங்கள் அதனை சுத்தமாக கழுவி 20 நிமிடங்கள் நன்கு ஊறவைக்கவும்.
அடுப்பில் 1½ டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய்யை சூடுபடுத்தவும். எண்ணெய் நன்கு காய்ந்த பிறகு ஒரு டீஸ்பூன் கடுகு, ஒரு டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு செய்து பொரியவிடவும்.
கடுகு, கடலை பருப்பு புரிந்துக்கொண்டு இருக்கும் போதே அதனுடன் நன்கு முழு காய்ந்த மிளகாயை சிவக்க வதக்கவும்.
கடலை பருப்பு ஓரளவு சிவந்து வந்த பிறகு ஒரு பெரிய வெங்காயத்தை பொடிதாக மற்றும் நீளமாக நறுக்கியதை அவற்றில் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கிக்கொண்டு இருக்கும் போதே அதனுடன் 10 பல் பூண்டு சேர்த்து வதக்க வேண்டும்.
பிறகு அதனது கொஞ்சம் கருவேப்பிலை இலையும் சேர்த்து வதக்கவும். வெங்காயம் மற்றும் பூண்டு இரண்டும் வதங்கி வந்ததும் ¼ டீஸ்பூன் மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் தனி மிளகாய் தூள், ½ டீஸ்பூன் பொடித்த சீரகம் மற்றும் ½ பொடித்த மிளகு பொடி சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து மசாலாவை 2 நிமிடம் வதக்கவும்.
பிறகு அரிசி வேகவைப்பதற்கு தண்ணீர் ஊற்ற வேண்டும், ஆக ஒரு கப் அரிசிக்கு ஒரு கப் தேங்காய் பால் மற்றும் ¼ கப் அளவிற்கு கரைத்த புளித்தண்ணீருடன் ¼ தண்ணீர் சேர்த்து குக்கரில் ஊற்றவும். இப்பொழுது தண்ணீரின் அளவு 1½ கப் அளவிற்கு வந்திருக்கும். மேலும் 1½ கப் தண்ணீர் ஊற்றி தண்ணீரை நன்றாக கொதிக்கவிடவும்.
தண்ணீர் நன்கு கொதி வைத்ததும் ஏற்கனவே ஊறவைத்துள்ள அரிசியை வடிகட்டி அரிசியை சேர்க்கவும்.
அரிசியை சேர்த்த பிறகு தேவையான அளவு உப்பு செய்து நன்றாக ஒரு முறை கிளறிவிட்டதும் குக்கரை மூடி ஐந்து விசில் விட்டு வேகவைக்கவும். ஐந்து விசில் வந்தபிறகு அடுப்பை அணைத்து குக்கரில் உள்ள பிரஷர் அடங்கும் வரை காத்திருங்கள். குக்கரில் பிரஷர் அடைங்கிய பிறகு திறந்து பார்க்கவும். சாதம் நன்றாக வெந்திருக்கும் நல்ல வாசனையாகவும் கட்டு சோறு தயாராகிருக்கும். சரி வாங்க இதற்கு சைடிஷாக முட்டை வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
இதையும் கிளிக் செய்து பாருங்கள் 👇
சுவையான பாலக் பன்னீர் புலாவ் செய்வது எப்படி ?
முட்டை வறுவல் செய்முறை:
ஒரு வாணலியில் எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன் சேர்க்கவும் எண்ணெய் காய்வதற்கு முன்பே மசாலா பொருட்களை சேர்க்க வேண்டும். ஆக அடுப்பை மிதமான தீயில் வைத்துக்கொள்ளவும்.
இப்பொழுது சீராக பொடி ½ ஸ்பூன், மிளகு பொடி ½ ஸ்பூன், மஞ்சள் தூள் ¼ டீஸ்பூன், ¾ டீஸ்பூன் மிளகாய் தூள், கரம் மசாலா ¼ டீஸ்பூன், உப்பு தேவையான அளவு சேர்த்து இவை அனைத்தையும் சேர்த்து மிக்ஸ் செய்யவும்.
பிறகு சிறிதளவு கருவேப்பிலை சேர்த்து கிளறிவிடுங்கள், பிறகு வேகவைத்த முட்டையை இரண்டாக கட் செய்து இரண்டு நிமிடம் இரண்டு பக்கமும் வேகவைக்கவும். அவ்வளவு தான் முட்டை வறுவல் தயார்.
கட்டு சோறுடன் இந்த முட்டை வறுவலை சேர்த்து நன்றாக ருசித்து பாருங்கள் நன்றி வணக்கம்..
இதையும் கிளிக் செய்து பாருங்கள் 👇
இந்த மாதிரி வெஜ் நூடுல்ஸ் டின்னருக்கு செஞ்சு பாருங்க
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள்!!! |