Ragi Dosa Recipe in Tamil
தினசரி உணவாக தோசை மற்றும் இட்லி போன்ற உணவுகளை சாப்பிட்டு வருவார்கள். ஒரு வேளை வீட்டில் மாவு இல்லையெனில் கடைகளுக்கு சென்று பல விதமான உணவுகளை சாப்பிட்டு வருகிறார்கள். சத்து மிகுந்த உணவுகளை சாப்பிடாததால் தான் உடலில் பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதனால் சத்தான உணவான கேழ்வரகு பன் தோசை சுலபமாக செய்வதை இந்த பதிவை பார்த்து தெரிந்து கொள்வோம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
தேவையான பொருட்கள் :
- கேழ்வரகு மாவு – 1 கப்
- வெள்ளை ரவா – 1 கப்
- தயிர் – 1 கப்
- எண்ணெய் – தேவையான அளவு
- கடுகு – 3/4 டேபிள் ஸ்பூன்
- வெள்ளை உளுந்து – 1 டேபிள் ஸ்பூன்
- பெருங்காயம் – சிறிதளவு
- பச்சை மிளகாய் – சிறிதளவு
- இஞ்சி – சிறிதளவு
- வெங்காயம் – சிறிதளவு
- கேரட் – சிறிதளவு
- கொத்தமல்லி இலை – சிறிதளவு
- ஆப்ப சோடா – 2 டேபிள் ஸ்பூன்
கேழ்வரகு பன் தோசை செய்முறை :
ஸ்டெப் : 1
முதலில் ஒரு பவுலை எடுத்து கொள்ளவும். அதனுடன் 1 கப் கேழ்வரகு மாவு, 1 கப் வெள்ளை ரவை, மற்றும் 1 கப் தயிர் இந்த மூன்று பொருட்களையும் சேர்க்கவும். பிறகு தண்ணீர் சேர்த்து கெட்டிப்படாத அளவிற்கு நன்றாக கலக்கவும். இதனை 10 முதல் 15 நிமிடம் ஒரு தட்டை போட்டு ஊற வைக்கவும்.
டின்னருக்கு கோதுமை அடை தோசை இப்படி செஞ்சு கொடுங்க.! சூப்பரா இருக்கும்..!
ஸ்டெப்: 2
அடுத்ததாக அடுப்பில் கடாய் வைத்து கொள்ளவும். பிறகு எண்ணெய், கடுகு, வெள்ளை உளுந்து, பெருங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம், கேரட் மற்றும் கொத்தமல்லி இலையை போன்ற பொருட்களை சேர்த்து நன்றாக வதக்கவும்.
ஸ்டெப் :3
ஒரு மிக்சியை எடுத்து கொள்ளவும். அதில் ஊற வைத்த கேழ்வரகு மாவை ஊற்றி தண்ணீர் விடாமல் அரைக்கவும். பின்பு அதனை ஒரு பவுலுக்கு மாற்றவும். அதில் வதக்கி வைத்த பொருட்களை சேர்த்து கொள்ளவும். அதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் மிருதுவாக இருப்பதற்கு 2 டேபிள் ஸ்பூன் ஆப்ப சோடாவை சேர்த்து நன்றாக கலக்கவும்.
ஸ்டெப் : 4
அடுப்பில் ஒரு தாவை எடுத்து வைத்து கொள்ள வேண்டும். பிறகு கலந்து வைத்த கேழ்வரகு மாவை தோசை வடிவில் ஊற்றவும். அதனுடன் மேல் எண்ணெய் சேர்த்து ஒரு பக்கம் வெந்தவுடன் மறுபக்கம் திருப்பி போடவும். அதன் பின் தோசை நன்றாக பொன்னிறமாக மாறியவுடன் எடுத்தால் சத்தான கேழ்வரகு பன் தோசை ரெடி.
வேர்க்கடலை சட்னி :
தேவையான பொருட்கள் :
- எண்ணெய் – தேவையான அளவு
- சிவப்பு மிளகாய் – 5
- பூண்டு – சிறிதளவு
- புளி – சிறிதளவு
- தேங்காய் – 2 பல்
- தோல் எடுத்த வேர்க்கடலை – 3/4 கப்
வேர்க்கடலை சட்னி செய்முறை :
ஸ்டெப் : 1
முதலில் ஒரு காடாயை எடுத்து கொள்ளவும். பிறகு எண்ணெய் மற்றும் சிவப்பு மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். அதனால் அதே கடாயில் பூண்டு, புளி சேர்த்து வதக்கவும். பிறகு ஒரு மிக்சியில் வதக்கி வைத்த பொருட்கள், தேங்காய் பல், தோல் எடுத்து வைத்த வேர்க்கடலை மற்றும் உப்பு சேர்த்து நன்றாக அரைக்கவும்.
ஸ்டெப் : 2
அரைத்து வைத்த வேர்க்கடலை சட்னியை எடுத்து கொள்ளவும். இதனை ஒரு பவுலில் மாற்றவும். கடாயை எடுத்து கொண்டு அதில் எண்ணெய் சேர்க்கவும், அதில் கடுகு சேர்த்து பொரிந்தவுடன் அரைத்து வைத்த வேர்க்கடலை சட்னியை ஊற்றினால் வேர்க்கடலை சட்னி ரெடி.
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |