தேங்காய் சட்னியை இந்த ஸ்டைலில் ஒரு முறை செஞ்சு பாருங்க..

Advertisement

கேரளா தேங்காய் சட்னி

இட்லி, தோசை என்றாலே என்ன சட்னி செய்வது யோசிப்பது என்று தான் புலம்புவார்கள். எப்படி யோசித்தாலும் மூளைக்கு எட்டுவது தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, கொத்தமல்லி சட்னி, புதினா சட்னி, பூண்டு சட்னி போன்றவை தான் ஞாபகத்திற்கு வரும். ஒரே மாதிரி சட்னி செய்து சாப்பிட்டால் சாப்பிடுகிறவர்களுக்கு சரி, செய்பவர்களுக்கும் சரி போர் அடித்து விடும். அதனால் தான் இந்த பதிவில் கேரள ஸ்டைலில் தேங்காய் சட்னி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

தேங்காய் சட்னி செய்ய தேவையான பொருட்கள்:

தேங்காய்- ஒரு கப்

சின்ன வெங்காயம்- 10

பச்சை மிளகாய்- 3

உப்பு- தேவையான அளவு

கடுகு- 1 தேக்கரண்டி

உளுத்தப்பருப்பு- 1/2 தேக்கரண்டி

இஞ்சி- துண்டு

கருவேப்பிலை- சிறிதளவு

காய்ந்த மிளகாய்- 1

தேங்காய் தயிர் சட்னி கேட்பதற்கு மட்டும் கிடையாது டேஸ்ட்டிலும் அருமையாக இருக்கும்..!

தேங்காய் சட்னி செய்முறை:

கேரளா தேங்காய் சட்னி

தேங்காய் 1 கப் திருகு வைத்துப் கொள்ளவும். சின்ன வெங்காயம் தோல் உரித்து 3, இஞ்சியை தோல் உரித்து எடுத்து வைத்து கொள்ளவும்.

அடுத்து ஒரு மிக்சி ஜாரை எடுத்து அதில் 3 பச்சை மிளகாய், திருகி வைத்த தேங்காய், சின்ன வெங்காயம், இஞ்சி, தேவையான அளவு உப்பு, சிறிதளவு புளி சேர்த்து அரைத்து கொள்ளவும்.

அதன் பிறகு தாளிப்பதற்கு கடாய் வைத்து அதில் எண்ணெய் 2 தேக்கரண்டி ஊற்றி கொள்ளவும். எண்ணெய் சூடானதும் கடுகு 1 தேக்கரண்டி, உளுத்தப்பருப்பு 1/2 தேக்கரண்டி, கருவேப்பிலை சிறிதளவு, காய்ந்த மிளகாய் 1, சின்ன  வெங்காயம் 5 எடுத்து சிறியதாக நறுக்கி அதனையும் சேர்த்து வதக்கி கொள்ளவும். பிறகு அரைத்து வைத்த சட்னியை சேர்த்து கலந்து விட்டு பரிமாறுங்கள்.

ஒரு நிமிடத்தில் இட்லி தோசைக்கு சூப்பரான சட்னி.  வறுத்து அரைக்க வேண்டியதில்லை 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil
Advertisement