சுண்டி இழுக்கும் கேரளா ஸ்டைல் மட்டன் ரோஸ்ட் இது மாதிரி செய்து பாருங்க

Advertisement

Kerala Mutton Roast Recipe in Tamil

அசைவ உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவாக இருக்கிறது. மூன்று வேலையும் அசைவ உணவுகளை கொடுத்தாலும் சலிப்பு இல்லாமல் சாப்பிடுவோம். நாம் அதிகமாக சாப்பிட கூடிய உணவாக இருப்பது மீன், சிக்கன், மட்டன், நண்டு, இறால் தான் அதிகமாக சாப்பிடுவோம். இந்த அசைவ உணவுகளை ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு மாதிரியாக சமைப்பார்கள். ஏன் நாம் ஒரு மாதிரி சமைப்போம், நம் வீட்டிற்கு பக்கத்தில் உள்ளவர்கள் ஒரு மாதிரி சமைப்பார்கள். இப்போ நாம் மதுரை ஸ்டைலில் உணவுகளை சாப்பிட வேண்டும் என்றால் மதுரைக்கு செல்ல முடியாது. அதற்கு பதிலாக நாம் வீட்டிலேயே அந்த மாதிரி உணவுகளை செய்து சாப்பிடலாம். அந்த வகையில் இன்றைய பதிவில் கேரளா ஸ்டைல் மட்டன் ரோஸ்ட் செய்வது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

கேரளா மாட்டான் ரோஸ்ட் செய்வது எப்படி.?

தேவையான பொருட்கள்  செய்முறை 
 மட்டன்-1/2 கிலோ முதிலல் மட்டனை பீஸ் பீஸ் ஆக கட்டு செய்து நன்றாக கழுவி கொள்ளவும்.
வெங்காயம்-3 அடுத்து மட்டனை ஊற வைப்பதற்கு ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், மஞ்சள் தூள், சுவைக்கு உப்பு மற்றும் சில கறிவேப்பிலை போன்றவை சேர்த்து கலந்து கொள்ளவும்.
தக்காளி- 1 இதனுடன் கழுவி வைத்துள்ள மட்டனையும் சேர்த்து 30 நிமிடத்திற்கு ஊற வைக்க வேண்டும்.
இஞ்சி பூண்டு விழுது- 1 தேக்கரண்டி 30 நிமிடம் கழித்து ஊற வைத்துள்ள மட்டனை வேக விட வேண்டும்.
கருவேப்பிலை – சிறிதளவு அதன் பிறகு அடுப்பில் கடாய் வைத்து அதில் எண்ணெய் சேர்க்க வேண்டும். அதனுடன் கருவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.
சீரக தூள், மிளகு தூள்- 2தேக்கரண்டி பின் அதனுடன்  நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து ஓரிரு நிமிடங்கள் வதக்கவும். வீணாகியம் வதங்கிய பிறகு  சீரகத் தூள் மற்றும் பெருங்காயத்தூள், மிளகு தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.
மிளகாய் தூள்- 1 தேக்கரண்டி பின் இதில் வேக வைத்துள்ள மட்டனை சேர்த்து கலந்து விட வேண்டும். சிறிது நேரம் வதக்கிய பிறகு 1/4 கப் தண்ணீர் சேர்த்து ஒரு கொதி கொதிக்க வைக்க வேண்டும்.
கரம் மசாலா தூள்- 1 தேக்கரண்டி வேகின்ற மட்டன் ஆனது தண்ணீர் இஞ்சி எண்ணெய் மிதக்கின்ற பதம் வந்த பிறகு அடுப்பை அணைத்து விடலாம்.
பெருங்காய தூள்- 1தேக்கரண்டி இந்த மட்டன் ரோஸ்ட்டை ஆப்பம், சப்பாத்தி, சாதம் போன்றவற்றிற்கு தொட்டு சாப்பிடலாம் சுவை அருமையாக இருக்கும். ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க

மட்டன் மிளகு வறுவல் இப்படி செஞ்சி பாருங்க அப்படியொரு டேஸ்ட்டா இருக்கும்..!👇

Mutton Varuval

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்!!!

 

Advertisement