கேரளா style வெஜிடபிள் தேங்காய் குருமா
வீட்டில் இருந்தே சுவையான கேரளா ஸ்டைலில்ஒரு குருமா. கேரளா என்றால் அங்கு பிரசித்திபெற்றது தேங்காய் தான். அந்த தேங்காவை கொண்டு எண்ணற்ற வகையான உணவுகளை செய்யலாம். அந்த வகையில் இன்று கேரளாவின் ஸ்பெஷல் உணவான காய்கறி தேங்காய் குருமா எப்படி செய்வது என்று பார்க்கலாம். சிலருக்கு இந்த ரெசிபி செய்ய தெரியாமல் கூட இருக்கலாம். அந்த கவலையை போக்க இதோ உங்களுக்காகவே ஈஸியான முறையில் குருமா செய்முறை விளக்கத்தை கீழே படித்து தெரிந்து கொள்ளுங்கள். சரி வாங்க இப்போ இந்த ரெசிபியை எப்படி செய்யலாம்னு பார்க்கலாம்..!
வெஜிடபிள் தேங்காய் குருமா செய்ய தேவையான பொருட்கள்
கேரட் ½ கப்
உருளைக்கிழங்கு – ½ கப்
பச்சை பட்டாணி – ½ கப்
பீன்ஸ் – ¼ கப்
வெங்காயம் – ½ கப்
பூண்டு கிராம்பு, இலவங்கப்பட்டை – 3 முதல் 4
இஞ்சி – 1
பச்சை மிளகாய் – 2
மிளகு – 1 தேக்கரண்டி
ஏலக்காய் – 3
தேங்காய் பால் – 2 கப்
கறிவேப்பிலை
தேங்காய் எண்ணெய் 2 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப
சர்க்கரை – தேவைக்கேற்ப
வெஜிடபிள் தேங்காய் குருமா செய்முறை :
முதலில் ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெயை சூடாக்கி, அதில் இலவங்கப்பட்டை, ஏலக்காய், கிராம்பு, கருப்பு மிளகு சேர்த்து, குறைந்த வெப்பத்தில் வாசனை வரும் வரை வறுக்கவும்.
பிறகு இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையை அதனுடன் சேர்க்கவும். குறைந்த வெப்பத்தில் வெங்காயம் பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும்.
அதில் நறுக்கிய காய்கறிகளைச் சேர்த்து பச்சை தன்மை நீங்கும் வரை வதக்கவும்.
காய்கள் வதங்கியுடன் தேங்காய் பால் சேர்க்கவும். சுவைக்கேற்ப உப்பு சேர்த்துகே கொள்ளவும்.
பிறகு கடாயை மூடி, காய்கறிகளை வேக வைக்கவும்.
இனிப்பு சுவைக்காக, விரும்பினால் சர்க்கரை சேர்த்துக்கொள்ளலாம்.
இப்போது சுவையான வெஜிடபிள் தேங்காய் ஸ்டூவ் ரெடி..
இதனை அப்பம் அல்லது வேகவைத்த சாதத்துடன் கேரள பாணி வெஜிடபிள் தேங்காய் ஸ்டூவை பரிமாறினால் மிகவும் சுவையாக இருக்கும்.
இதுபோன்ற சுவையான உணவுவகைகளை தெரிந்துகொள்ள எங்கள் தளத்தை பின்தொடருங்கள்….
எப்படி? Malpua recipe in tamil..! |
கண்ணனுக்கு பிடித்த வெண்ணெயுடன்…கிருஷ்ண ஜெயந்தி special பாதாம் கீர்
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள் |