வீடே மணக்கும் கேரளா ஸ்டைல் எரிசேரியை இப்படி ஒரு முறை செய்து சுவைத்து பாருங்கள்..!

Advertisement

Kerala Style Erissery Recipe in Tamil

நாம் அனைவருக்குமே தினமும் ஒரே மாதிரியான உணவினை சாப்பிடுவது என்பது அவ்வளவாக பிடிக்காது. அதிலும் குறிப்பாக ஒரு சிலருக்கு பலவகையான உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதனால் தினமும் ஒரு புதிய வகையான உணவினை செய்து சுவைத்திடுவார்கள். அப்படிப்பட்ட உணவுப்பிரியர்களுக்கு மிகவும் பிடித்த பலவகையான உணவுமுறைகளில் ஒன்று தான் கேரளா மாநிலத்தின் உணவு வகைகள் பொதுவாக கேரளா மாநிலத்தின் அனைத்து உணவுகளுமே அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதனால் தான் இன்றைய பதிவில் கேரளா மாநிலத்தின் மிகவும் பிரபலமான ஒரு உணவான எரிசேரி செய்வது எப்படி என்பதை பற்றி விரிவாக பதிவிட்டுள்ளோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூடியுள்ள எரிசேரி ரெசிபியை ஒருமுறை செய்து சுவைத்து பாருங்கள். அப்புறம் திரும்ப திரும்ப செய்து சுவைப்பிங்க. சரி வாங்க பதிவினுள் செல்லலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Erissery Recipe in Tamil:

Kerala erissery recipe in tamil

கேரளா ஸ்டைல் எரிசேரி செய்வது எப்படி என்பதை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க.

அதற்கு முன்பு இந்த எரிசேரி ரெசிபிக்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.

  1. ஏத்தன் வாழைக்காய் – 2
  2. சேனைக்கிழங்கு – 1/2 
  3. தேங்காய் துருவல் – 2 கப் 
  4. கடுகு – 1 டீஸ்பூன் 
  5. சீரகம் – 2 டீஸ்பூன் 
  6. உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன் 
  7. கருவேப்பிலை – 2 கொத்து 
  8. காய்ந்த மிளகாய் – 2
  9. மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன் 
  10. மிளகு தூள் – 1 டீஸ்பூன்
  11. மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
  12. தேங்காய் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் 
  13. தண்ணீர் – தேவையான அளவு 
  14. உப்பு – தேவையான அளவு 
  15. நாட்டு சர்க்கரை – 1 டீஸ்பூன்

மட்டன் பிடிக்குமா அப்போ ஒருமுறை இந்த செட்டிநாடு மட்டன் சுக்காவை செய்து சுவைத்து பாருங்க

செய்முறை:

ஸ்டேப் – 1

முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 2 ஏத்தன் வாழைக்காய் மற்றும் 1/2 சேனைக்கிழங்கு ஆகியவற்றை நன்கு சுத்தம் செய்துவிட்டு நறுக்கி கொள்ளுங்கள்.

பின்னர் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நாம் நறுக்கி வைத்துள்ள 2 ஏத்தன் வாழைக்காய் மற்றும் 1/2 சேனைக்கிழங்கு ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள்.

ஸ்டேப் – 2

அடுத்து அதில் 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள் , 1 டீஸ்பூன் மிளகு தூள், தேவையான அளவு உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து நன்கு வேகவைத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப் – 3

பிறகு ஒரு மிக்சி ஜாரை எடுத்து அதில் 1 கப் தேங்காய் துருவல் மற்றும் 1 டீஸ்பூன் சீரகம் ஆகியவற்றை சேர்த்து நன்கு பசை போல் அரைத்து கொள்ளுங்கள். இத்தனையும் நாம் வேகவைத்துள்ளவற்றுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

கேரளா ஸ்டைல் உண்ணியப்பம் செய்வது எப்படி

ஸ்டேப் – 4

இப்பொழுது அதில் 1 டீஸ்பூன் மிளகாய் தூள் மற்றும் 1 டீஸ்பூன் நாட்டு சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள்.

ஸ்டேப் – 5

அது கொதித்து கொண்டிருக்கும் நேரத்தில் மற்றொரு அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயயை ஊற்றி அதனுடன் 1 டீஸ்பூன் கடுகு, 2 டீஸ்பூன் சீரகம், 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு, 2 கொத்து கருவேப்பிலை , 2 காய்ந்த மிளகாய் மற்றும் 1 கப் தேங்காய் துருவல் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி நாம் வேகவைத்துள்ள வற்றுடன் சேர்த்து நன்கு கலந்து இறக்கினால் சுவையான கேரளா ஸ்டைல் எரிசேரி தயாராகிவிட்டது.

இட்லி, சப்பாத்தி, தோசை ஆகியவற்று ஏற்ற கடாய் காளான் இப்படி ஒருமுறை செய்து சுவைத்து பாருங்க

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil

 

Advertisement