Kondakadalai Dosa Recipe in Tamil
பெரும்பாலும் அனைவரது வீடுகளிலும் காலை உணவாக இட்லி, தோசை மற்றும் சப்பாத்தி போன்றவை தான் இருக்கும். நம்மில் பெரும்பாலானவர்களுக்கு இட்லியை விட தோசை தான் சாப்பிட பிடிக்கும். இருந்தாலும், தினமும் மாவு தோசையே காலை உணவாக இருந்தால் அதனையும் சாப்பிட விரும்ப மாட்டோம். எனவே, அந்த வகையில் உங்களுக்கு பயனுள்ள வகையில், இப்பதிவில் சூப்பரான டேஸ்டியான கொண்டக்கடலை தோசை செய்வது எப்படி.? என்பதை இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
கொண்டைக்கடலையில் நம் உடலுக்கு ஆற்றல் அளிக்கக்கூடிய சத்துக்கள் உள்ளது. எனவே, கொண்டைக்கடலையை நாம் காலை உணவாக எடுத்து கொள்வதன் மூலம் நாள் முழுவதும் ஆற்றலுடன் இருக்கலாம். எனவே, காலை உணவுக்கு கொண்டைக்கடலை தோசை செய்து பாருங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
கொண்டைக்கடலை தோசை எப்படி செய்வது.?
தேவையான பொருட்கள்:
- வெள்ளை கொண்டக்கடலை – 1 கப்
- பச்சரிசி – 1/2 கப்
- வெந்தயம் – 1 ஸ்பூன்
- இஞ்சி – 1 துண்டு
- பச்சை மிளகாய் – 2
- சீரகம் – 1/2 ஸ்பூன்
- உப்பு – 1/2 ஸ்பூன்
- நெய் – தேவையான அளவு
செய்முறை:
ஸ்டேப் -1
முதலில், ஒரு பாத்திரத்தில் வெள்ளை கொண்டக்கடலை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 8 மணிநேரம் வரை ஊறவிடுங்கள்.
ஸ்டேப் -2
அடுத்து, மற்றொரு பாத்திரத்தில் பச்சரிசி மற்றும் வெந்தயம் சேர்த்து இதனையும் 8 மணிநேரம் ஊறவைத்து எடுத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் -3
பின்பு, இஞ்சி மற்றும் பச்சை மிளகாயினை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் -4
இப்போது, ஒரு மிக்ஸி ஜாரில் ஊறவைத்துள்ள கொண்டக்கடலை, பச்சரிசி மற்றும் வெந்தயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி பேஸ்டாக அரைத்து எடுத்து கொள்ளுங்கள்.
இட்லி மாவு இல்லாத நேரத்தில் இந்த ரெசிபியை செய்து பாருங்க
ஸ்டேப் -5
அடுத்து, இந்த மாவை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி 8 அல்லது 12 மணிநேரம் வரை புளிக்க விடுங்கள்.
ஸ்டேப் -6
மாவு புளித்த பிறகு, மாவை எடுத்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு நன்கு கரைத்து எடுத்து கொள்ளுங்கள். இந்நிலையில் இதற்கு தேவையான அளவு உப்பு மற்றும் 2 ஸ்பூன் சீரகம் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் -7
இப்போது, அடுப்பில் தோசை கல்லை வைத்து, கல் சூடானதும் அதில் தயார் செய்து வைத்துள்ள தோசை மாவை ஊற்றி நெய் ஊற்றி இருபுறமும் சிவற விட்டு எடுத்தால் சுவையான ஹெல்த்தியான கொண்டக்கடலை தோசை ரெடி..!
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள்!!! |