Kondakadalai Vadai in Tamil
வணக்கம் நண்பர்களே மாலை நேரத்தில் மொறுமொறுவென்று ஸ்னாக்ஸ் சாப்பிட வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் அதற்கு கடைகளில் விற்கும் மொறு மொறுவென தீனி வகைகளை வாங்கி சாப்பிட்டு வருவார்கள். அதில் பல்வேறு தீமைகள் கொண்டதாக இருக்கும். அதனால் இன்றைய பதிவில் மாலை வேலையில் மொறுமொறுப்பான கொண்டக்கடலை வைத்து வடை செய்வதை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க.
கொண்டக்கடலை வடைக்கு தேவையான பொருட்கள் :
- கொண்டக்கடலை – 1 கப்
- பச்சை மிளகாய் – 2
- வெங்காயம் – 1
- கொத்தமல்லி – சிறிதளவு
- சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்
- மிளகு தூள் – 1/4 டேபிள் ஸ்பூன்
- தனியாத்தூள் – 1 டேபிள் ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- தண்ணீர் – போதுமான அளவு
- எண்ணெய் – 100 மிலி
- பூண்டு – 4
கொண்டக்கடலை வடை செய்முறை :
ஸ்டெப்: 1
முதலில் ஒரு மிக்சியை எடுத்து கொண்டு, அதனுடன் 8 மணி நேரம் ஊற வைத்த கொண்டக்கடலையை சேர்க்கவும், பின்பு அதனுடன் பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி, சீரகம், மிளகு தூள், தனியாத்தூள் மற்றும் உப்பு சேர்த்து, போதுமான அளவு தண்ணீர் ஊற்றி, கெட்டியாக அரைத்து கொள்ளவும்.
மொறுமொறுவென்று கீரை வடை இப்படி செய்து பாருங்கள்..! மாலை நேரத்தில் சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்..!
ஸ்டெப் : 2
ஒரு பவுலில் அரைத்து வைத்த கொண்டக்கடலை மாவினை மாற்றவும். அந்த மாவை 10 நிமிடம் அப்படியே வைக்கவும். பிறகு ஒரு கடாயை எடுத்து கொண்டு, அதனுடன் எண்ணெயை ஊற்றி சூடான பின்பு, அரைத்து வைத்த கொண்டக்கடலை மாவை கையில் எடுத்து உருண்டையாக பிடித்து, அதனை தட்டை வடிவில் தட்டி கொண்டு எண்ணெயில் போடவும்.
ஸ்டெப் :3
பிறகு கொண்டக்கடலை வடையை இரண்டு பக்கமும் திருப்பி போட்டு எடுக்கவும். இதே போல இந்த 10 நிமிடம் வடையை திருப்பி போட்டு எடுத்தால் நல்ல சத்தான கொண்டக்கடலை வடை ரெடி.
இனி மசாலா வடை செய்வதற்கு கடலைப்பருப்பு தேவையில்லை..!
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |