கூரை கடை சட்னி – Koorai Kadai Satni in Tamil
எப்போதும் ஒரே மாதிரியான சமையல் செய்து அலுத்து போயிருப்போம். அதாவது நாம் காலை இரவு என இரண்டு வேளைக்கும் ஒரே வகையான சட்னியை செய்து சாப்பிடுவது வழக்கம் அல்லவா..! அப்படி இருக்கும் போது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான சட்னியை செய்து சாப்பிட்டால் தான் நமக்கும் சாப்பிட ஆசையாக இருக்கும். அதேபோல் தினமும் வித்தியாசமான சைடிஷ் சாப்பிட்டால் தான் சுவையாக இருக்கும். சிலருக்கு வீட்டில் உள்ள சட்னியை சாப்பிடுவதை விட ரோட்டு கடையில் சாப்பிடும் உணவுகள் பிடிக்கும். அதேபோல் கூரை கடை சட்னி கேள்வி பட்டிருக்கிறீர்களா..? அந்த சட்னியை தான் நாம் இன்று எப்படி செய்வது என்று பார்க்க போகிறோம். அதனை பற்றி பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👉 https://bit.ly/3Bfc0Gl |
Koorai Kadai Satni in Tamil:
- எண்ணெய்
- சீரகம்
- பூண்டு
- பச்சை மிளகாய்
- கருவேப்பிலை
- வறுத்த வேர்க்கடலை
- பொட்டுக்கடலை
- கொத்தமல்லி
எவ்வளவு சட்னி செய்தாலும் இந்த சட்னிக்கு தனி ருசி தான்
செய்முறை:
முதலில் கடாய் எடுத்துக் கொள்ளவும். அதனை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி அதில் சீரகம், பூண்டு, பச்சைமிளகாய், 1 கொத்து கருவேப்பிலை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும். இதனை அப்படி வைத்து ஆறவிடுவோம்.
ஆரிய பின்பு அதனை மிக்சி ஜாரில் சேர்த்து எடுத்துக் கொள்ளவும். இப்போது அடுத்து அந்த பொருட்களுடன் 1 கப் வேர்க்கடலை, பொட்டுக்கடலை சேர்த்து அதன் கூடவே கொத்தமல்லி தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்துக் கொள்வோம்.
தாளிப்பு முறை:
இப்போது அதே கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு பொரிந்தவுடன் அதில் கருவேப்பிலை, மிளகாய், போட்டு அரைத்து வைத்துள்ள சட்னியை சேர்க்கலாம். அதன் பின்பு இந்த கல் தோசை போட்டு சாப்பிட்டால் இதனை கெட்டியாக வைத்து சாப்பிடவும். அதேபோல் இட்லி சுட்டால் அதில் தண்ணியாக சட்னி ஊற்றி சாப்பிடலாம்.
எப்போதும் போல் சட்னி செய்யாமல் கர்நாடகா ஸ்டைல் சட்னி செய்து கொடுங்கள்
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal Kurippugal |