மாங்காய் சாதம் எப்படி செய்வது – Kovil Style Mango Rice in Tamil
மாங்காய் நிறைய வகையாக பயன்படுத்துவது வழக்கம். ஊறுகாய், வற்றல், என வகை வகையாக உதவுகிறது. முக்கியமாக மீன் குழம்பு, புளிக்குழம்பு என இதுபோன்ற உணவுகளில் சேர்த்து சாப்பிடுவார்கள். அவ்வளவு ஏன் மாங்காய் பச்சடி கூட செய்து தொட்டுகையாக சாப்பிடுவார்கள். இப்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரியான உணவுகளை சாப்பிடுவது வழக்கம். நம் வீட்டில் அதிகம் செய்யாத ஒரு உணவு என்றால் மாங்காய் சாதம். இந்த மாங்காய் சாதமானது ஐயர் வீட்டில் தான் இது சுவையாக செய்வார்கள். அது எப்படி என்று பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
Kovil Style Mango Rice in Tamil:
- வடித்த சாதம் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- கடுகு
- தேங்காய்
- தேங்காய் எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
- காய்ந்த மிளகாய் – 4
- உளுத்தம் பருப்பு – 1 ஸ்பூன்
- கடலை பருப்பு – 1 ஸ்பூன்
- வேர்க்கடலை – 1 ஸ்பூன்
- பச்சை மிளகாய் – 3
- கருவேப்பிலை
- சீரகம் – 1/2 ஸ்பூன்
- பெருங்காயம் – 1/2 ஸ்பூன்
- மஞ்சள் தூள் – 1.2 ஸ்பூன்
- மாங்காய் – 1
- உப்பு – தேவையான அளவு
Manga Sadam Eppadi Seivathu Tamil:
முதலில் மிக்சி ஜாரை எடுத்துக் கொள்ளவும். அதில் 1/2 முடியில் பாதி தேங்காய் துருவல் எடுத்துக் கொள்ளவும். அதன் கூடவே 1.1/2 ஸ்பூன் கடுகு சேர்த்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அரைத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
அடுத்து ஒரு கடாய் எடுத்துக் கொள்ளவும். அதில் 3 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். அதில் கடுகு 2 ஸ்பூன் சேர்த்து கடுகு பொரிந்தவுடன் அதில் காய்ந்த மிளகாய் சேர்க்கவும். அடுத்து அதன் கூடவே கடலை பருப்பு, வேர்க்கடலை 1 கைப்பிடி, உளுத்தம் பருப்பு 1 ஸ்பூன் சேர்த்துக் கொள்ளவும்.
அது ஓரளவு பொரிந்தவுடன் அதில் நாம் அறிந்து வைத்துள்ள பச்சை மிளகாய் 3 அல்லது 4 சேர்த்து கொள்ளவும். அதனுடன் 2 கொத்து கருவேப்பிலை சேர்த்துக் கொள்ளவும். அது ஓரளவு வதங்கியதும் அதில் சீரகம் 1/2 டீஸ்பூன், அதனுடன் பெருங்காயம் – 1/2 ஸ்பூன் சேர்த்து கலந்துவிடவும்.
அடுத்து துருவி தனியாக எடுத்து வைத்துள்ள மாங்காய் அதில் சேர்க்கவும். அது ஒரு முறை கலந்துவிடவும். அடுத்து அதில் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
அதேபோல் அதன் கூடவே நாம் அரைத்து வைத்துள்ள தேங்காய் கடுகு அதில் சேர்க்கவும். அது பச்சை தேங்காய் என்பதால் 1/4 டம்ளர் அளவு தண்ணீர் சேர்த்து அதனை நன்கு கலந்துவிடவும். அதில் தேங்காய் எண்ணெய் 3 ஸ்பூன் ஊற்றி அடுப்பை அணைத்து அதில் நாம் வடித்து வைத்துள்ள சாதத்தை சேர்த்து அதன் மீது கொத்தமல்லி தலை சேர்த்து நன்கு கலந்துவிடவும்.
மட்டனில் கிரேவி செய்து சாப்பிட்ருப்பீர்கள்.. ஆனால் இந்த மாதிரி குருமா செய்து சாப்பிட்ருக்கீர்களா |
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal Kurippugal |