கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பாதாம் கீர்
பொதுவாக நம்ம வீட்ல செய்கின்ற ஸ்விட்ஸ் என்றாலே ஒரு தனி சுவை தான். அந்த வகையில் இன்னைக்கு நாம சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய சுவையான பாதாம் கீர் செய்வது எப்படி என்று பார்ப்போம். இந்த பாதாம் கீர் செய்வது மிகவும் கடினமான வேலை என்று பலர் நினைத்து கொண்டிருக்கின்றனர், இருந்தாலும் இந்த பாதாம் கீர் செய்முறை பொறுத்தவரை சில டிரிக்ஸ் இருக்கு, அப்படி செய்தாலே போதும் இந்த பாதாம் கீர் மிக எளிமையாக செய்துவிட முடியும். சரி வாங்க எளிமையான முறையில் பாதாம் கீர் செய்வது எப்படி என்று இந்த பகுதியில் நாம் தெரிந்துகொள்வோம்.
பாதாம் கீர் தயாரிக்க தேவையான பொருட்கள்:
பாதாம் பேஸ்டுக்கு:
பாதாம் – 1.5 கப்
சூடான தண்ணீர் (ஊறவைக்க)
கீருக்கு:
நெய் – 2 தேக்கரண்டி
முந்திரி – 20
திராட்சை – 10
பால் – 4 கப்
குங்குமப்பூ – 1 தேக்கரண்டி
சர்க்கரை – 1/2 கப்
ஏலக்காய் தூள் – 1/2 தேக்கரண்டி
பிஸ்தா – 5
மாவா தயாரிக்க:
வெண்ணெய்
பால் – ¼ கப்
பால் பவுடர் – ½ கப்
பாதாம் கீர் செய்முறை | Recipe of Badam kheer:
படி 1 : ஒரு கடாயில் 4 கப் பால் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும், பிறகு அதில் 1 தேக்கரண்டி குங்குமப்பூ சேர்த்து பால் கெட்டியாகும் வரை கொதிக்க விடவும்.
படி 2 : இதற்கிடையில், 1 டீஸ்பூன் வெண்ணெயை சூடாக்கி ¼ கப் பால் சேர்த்து, வெண்ணெய் மற்றும் பால் நன்றாக உருகும் வரை கிளறவும். பிறகு அதில் ½ கப் பால் பவுடர் சேர்க்கவும். அதனை கெட்டியாக மாறும் வரை மிதமான சூட்டில் கிளறவும். தயாரித்த இந்த கலவையை பாலில் சேர்க்கவும்.
படி 3 : பாதாம் மற்றும் முந்திரியை வெதுவெதுப்பான நீரில் சிறிது நேரம் ஊறவைக்கவும்.
படி 4 :சிறிது நிமிடத்திற்கு பிறகு ஊறிய முந்திரி மற்றும் பாதாமை பேஸ்டாக அரைத்து கொள்ளவும்.
படி 5 :பிறகு மற்ற ஒரு பாத்திரத்தில் சிறிதளவு பால் சேர்த்து அதனுடன் அரைத்து வைத்துள்ள பாதாம் முந்திரி, மற்றும் நெய்யை சேர்த்து அந்த பால் கிரீம் ஆகும் வரை கிளறவும்.
படி 6 :இப்போது இரண்டு பால்களையும் ஒன்றாக கலக்கவும். அதில் தேவையான அளவு சர்க்கரை கலந்து, சர்க்கரை கரையும் வரை மிதமான தீயில் கிளறவும்.
படி 7 :பிறகு அதில் ஏலக்காய் தூள், குங்கும பூ, மற்றும் நெய்யில் வறுத்த முந்திரிகளை சேர்க்கவும்.
படி 8 :இப்போது அந்த கலவையை ஒரு பாத்திரத்தில் மாற்றிக்கொள்ளவும். இறுதியாக சிறிதாக நறுக்கிய பாதாம்களை அதன் மேல் பகுதியில் தூவவும்.
இப்போது சுவையான கிருஷ்ணா ஜெயந்தி ஸ்பெஷல் பாதாம் கீர் தயார்.
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |