சுவையான குடை மிளகாய் குழம்பு செய்வது எப்படி..?

Advertisement

Kudamilagai Kulambu in Tamil

பொதுவாகவே இல்லத்தரசிகளுக்கு குழம்பு வைப்பது பெரிய பிரச்சனையாக உள்ளது. அதிலும் தினசரி ஒரே குழம்புகளை செய்து வருவதனால் வீட்டில் யாருக்கும்  விருப்பம் இல்லாமல் போய் விடும். ஒரு சிலருக்கு குடை மிளகாய் காரம் தன்மை குறைவாக இருக்கும். அதனாலேயே குடை மிளகாயை யாரும் விரும்பி சாப்பிடுவது இல்லை. அதனால் இன்றைய பதிவில் குடை மிளகாயை வைத்து குழம்பு செய்வது எப்படி என்பதை பற்றி கீழே பார்த்து தெரிந்து கொள்வோம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

குடை மிளகாய் குழம்பு செய்ய தேவையான பொருட்கள்: 

  • நல்லெண்ணெய் – 1/2 டேபுள் ஸ்பூன்
  • கடுகு –  1 டேபுள் ஸ்பூன்
  • வெந்தயம் – 1/4 டேபுள் ஸ்பூன்
  • கருவேப்பிலை – சிறிதளவு
  • அரைத்த வெங்காயம் –
  • பச்சை குடை மிளகாய் – சிறிதளவு
  • சிவப்பு குடை மிளகாய் – சிறிதளவு
  • தக்காளி – 2
  • உப்பு – தேவையான அளவு
  • மஞ்சள் தூள் – 1/4 டேபுள் ஸ்பூன்
  • மிளகாய் தூள் – 1/2 டேபுள் ஸ்பூன்
  • தனியா தூள் – 2 டேபுள் ஸ்பூன்
  • தண்ணீர் – போதுமான அளவு
  • புளி தண்ணீர் – சிறிதளவு

குடை மிளகாய் குழம்பு செய்முறை: 

 Kudamilagai Kulambu in Tamil

ஸ்டெப்: 1

முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து கொண்டு, அதில் நல்லெண்ணெய் சேர்த்து சூடான பின்பு, கடுகு, வெந்தயம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து பொரிந்தவுடன், அரைத்த வெங்காயம் விழுதை சேர்த்து நன்றாக வதக்கவும், பின்பு அதனுடன் பச்சை குடை மிளகாய் மற்றும் சிவப்பு குடை மிளகாய் உள்ள விதைகளைநீக்கி விட்டு, அதனை பெரிய துண்டுகளாக கட் பண்ணி, அதனையும்  சேர்த்து வாசனை வரும் வரை வதக்கவும். பின்பு தக்காளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி கொள்ளவும். தக்காளி சுருங்கிய பதம் வரும் வரை வதக்கவும்.

 

ஹோட்டல் ஸ்டைலில் செட்டிநாடு காரக்குழம்பு செய்வது எப்படி..?

 ஸ்டெப்: 2

அடுத்து குழம்புக்கு தேவையான மசாலா பொருட்களான மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து, அதனுடன் தண்ணீர் சேர்த்து, அந்த மசாலாவின் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

ஸ்டெப் : 3

 

அடுத்ததாக அதில் புளி கரைசலை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விடவும். இதனை 3 நிமிடம் அப்படியே வைத்து, பிறகு குழம்பை ஒரு பவுலுக்கு மாற்ற வேண்டும்.

ஐயர் வீட்டு வத்த குழம்பு செய்வது எப்படி.?

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்

 

Advertisement