Ladies Finger Chips Recipe in Tamil
நாம் அனைவருமே இந்த உலகில் நன்கு ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்றால் அதற்கு நமக்கு மிகவும் உதவுவது உணவுகள் தான். அப்படி நமது ஆரோக்கியத்தை சரியாக பராமரிக்க உதவும் உணவுகளை ஒரு சிலர் எடுத்து கொள்ள மறுப்பார்கள். அதிலும் குழந்தைகள் தங்களுக்கு பிடித்த உணவு என்றால் அதிக அளவு சாப்பிடுவார்கள். ஆனால் அவர்களுக்கு பிடிக்காத உணவு என்றால் அதனை முற்றிலும் ஒதுக்கிவிடுவார்கள். அப்படி அவர்களால் ஒதுக்கப்படும் பல உணவுகளில் ஒன்று தான் இந்த வெண்டிக்காய். அதனால் தான் இன்றைய பதிவில் வெண்டைக்காயை பயன்படுத்தி குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி வெண்டிக்காய் Chips செய்வது எப்படி என்பதை பற்றி விரிவாக காணலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Vendakkai Chips Fry Recipe in Tamil:
பொதுவாக குழந்தைகளுக்கு நமது உடலுக்கு பலவகையான நன்மைகளை செய்யக்கூடிய வெண்டைக்காய் என்றால் அவ்வளவாக பிடிக்காது. அதனால் தான் குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி வெண்டிக்காய் Chips செய்வது எப்படி என்பதை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க.
தேவையான பொருட்கள்:
- வெண்டைக்காய் – 250 கிராம்
- எலுமிச்சை பழச்சாறு – 1 டீஸ்பூன்
- மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்
- கரம் மசாலா தூள் – 1 டீஸ்பூன்
- மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
- மிளகு தூள் – 1/8 டீஸ்பூன்
- அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன்
- கடலை மாவு – 4 டேபிள் ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- எண்ணெய் – தேவையான அளவு
- தண்ணீர் – தேவையான அளவு
பச்சைமிளகாய் ஊறுகாயை இப்படி ஒரு முறை செய்து சுவைத்து பாருங்க..! சுவை நாக்கைவிட்டு நீங்காது
செய்முறை:
ஸ்டேப் – 1
முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 250 கிராம் வெண்டைக்காயை தேவையான அளவு தண்ணீரை ஊற்றி நன்கு சுத்தம் செய்து கொள்ளுங்கள். பின்னர் அதனை ஒரு துணியை பயன்படுத்தி ஒரு சொட்டு ஈரம் கூட இல்லாத அளவிற்கு நன்கு துடைத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 2
பிறகு அதனின் காம்பு பகுதிகளை நீக்கிவிட்டு அதனை இரண்டு பாதியாக நறுக்கி அதன் நடுவில் உள்ள விதையினை நீக்கிவிட்டு நிட்டவாக்கில் சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள்.
முருங்கைக்காயை ஒரே மாதிரி சாப்பிட்டு சலித்து போய்ட்டா அப்போ இந்த ரெசிபியை ட்ரை பண்ணுங்க
ஸ்டேப் – 3
பின்னர் அதனை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1 டீஸ்பூன் எலுமிச்சை பழச்சாறு, 1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள், 1 டீஸ்பூன் கரம் மசாலா தூள், 2 டீஸ்பூன் மிளகாய் தூள், 1/8 டீஸ்பூன் மிளகு தூள் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 4
அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு மற்றும் 4 டேபிள் ஸ்பூன் கடலை மாவு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். பிறகு அதன் மீது லேசாக தண்ணீரை தெளித்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 5
இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் தேவையான அளவு எண்ணெயை ஊற்றி அதில் நாம் கலந்து வைத்துள்ள வெண்டைக்காய் கலவையை போட்டு நன்கு பொறித்து எடுத்தால் சுவையான வெண்டிக்காய் Chips தயார்.
கேரட் பிடிக்காதவங்க கூட திரும்ப திரும்ப கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க இப்படி செஞ்சி கொடுத்தா
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |