வெண்டைக்காய் பக்கோடா
பொதுவாக அனைவருக்கும் மாலை நேரத்தில் ஸ்நாக்ஸ் சாப்பிடும் பழக்கம் இருக்கும். அதற்காக கடையில் உள்ள ஸ்னாக்ஸ் வாங்கி சாப்பிடுவோம். இனி கடையில் வாங்காமல் வீட்டிலே ஸ்நாக்ஸ் செய்து சாப்பிடலாம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே குழந்தைகளுக்கு ஹெல்தியான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்கலாம். அதுவும் குழந்தைகளுக்கு சத்தான காய்களை கொண்டு செய்துகொடுத்தல் சுவையானதாகவும் ஆரோக்கியமானதாகவும் இருக்கும். அந்த வகையில் இன்று வெண்டைக்காயை கொண்டு சுவையான மொறுமொறு பக்கோடா செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம் வாருங்கள்.
வெண்டைக்காய் பக்கோடா செய்வது எப்படி ?
தேவையான பொருட்கள்:
- வெண்டைக்காய் -10
- பச்சை மிளகாய் – 2
- இஞ்சி – 1
- கறிவேப்பிலை – சிறிதளவு
- மஞ்சள் – ½ தேக்கரண்டி
- மிளகாய் தூள் – ½ தேக்கரண்டி
- பெரும்காய தூள் – ½ தேக்கரண்டி
- சோளா மாவு – ¾ கப்
- அரிசி மாவு – ¼ கப்
- உப்பு – ½ தேக்கரண்டி
- எண்ணெய்
செய்முறை:
வெண்டைக்காயை நன்கு சுத்தம் செய்து, நறுக்குவதற்கு முன் ஈரப்பதம் இல்லாமல் அதனை பார்த்துக்கொள்ளவும். பின்னர் அதனை நீள்வாக்கில் நறுக்கிக்கொள்ளவும்.
பின்னர் வெண்டைக்காய் உடன் நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, கருவேப்பிலை, மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் பெருங்காய தூளை சேர்த்துக்கொள்ளவும்.
இந்த கலவையுடன் சோள மாவு, அரிசி மாவு தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் நன்றாக பிசையவும்.
இப்போது மாவை உருண்டையாக உருட்டி, சூடான எண்ணெயில் போட்டு, மிதமான தீயில், பொன்னிறமாக மாறும் வரை பொரிக்கவும்.
பக்கோடாக்கள் மிருதுவாகவும் பொன்னிறமாகவும் மாறும் வரை சுமார் 15 நிமிடங்கள் வறுத்து எடுக்கவும்.
இப்போது சுவையான மொறுமொறு வெண்டைக்காய் பக்கோடா ரெடி.
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |