கோதுமை மாவு இருந்தால் போதும் வித்தியாசமான பூரி ரெபிசி இப்படி செய்யலாம்..!

Advertisement

Masala Puri Seivathu Eppadi

பெரும்பாலான வீடுகளில் காலை உணவு இட்லியாகவும், இரவு உணவு தோசையாகவும் தான் இருக்கிறது. அந்த வகையில் பார்த்தால் இந்த உணவு முறை என்பது ஒரே மெனுவாகவும் சிலரது வீடுகளில் பின்பற்றப்படுகிறது என்றும் கூறலாம். இவை எல்லாம் சற்று மாறாக சப்பாத்தியும் வாரத்திற்கு ஒரு நாள் செய்வார்கள். எப்போதும் ஒரே மாதிரியான ரெசிபியை சாப்பிடுவது என்பது அனைவருக்கும் போர் அடிக்கும் ஒரு நடைமுறையாக மாறி விடும். ஆகையால் தினமும் இல்லை என்றாலும் கூட வாரத்திற்கு ஒருநாளாவது சற்று வித்தியாசமான ரெசிபியை செய்தால் தான் சாப்பிடுவதுற்கு ஏற்ற மாதிரியாக இருக்கும். அந்த வகையில் இன்றைய பதிவில் டின்னரில் செய்யக்கூடிய மசாலா பூரி செய்வது எப்படி என்பதை தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

மசாலா பூரி செய்வது எப்படி..?

பொருட்களின் அளவு செய்முறை விளக்கம்
பச்சை பட்டாணி- 100 கிராம் முதல் நாள் இரவே பச்சை பட்டாணியை நன்றாக தண்ணீரில் ஊற வைத்து விடுங்கள்.
உருளைக்கிழங்கு- 2 மறுநாள் காலையில் அடுப்பில் ஊறிய பட்டாணி, சிறிது உப்பு மற்றும் 2 உருளை கிழங்கை சேர்த்து நன்றாக வேக வைத்து லேசாக மசித்து விடுங்கள்.
பூண்டு- 3 பல் இப்போது அடுப்பில் மற்றொரு கடாயினை வைத்து அதில் எண்ணெய் சேர்த்து பின்பு நறுக்கிய பச்சை மிளகாய், தக்காளி, வெங்காயம், பூண்டு மற்றும் இஞ்சி என அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளுங்கள்.
இஞ்சி- சிறிய துண்டு
வெங்காயம்- 1
தக்காளி- 2
பச்சை மிளகாய்- 2
மிக்சி ஜாரில்  சேர்த்தல் பின்பு வதக்கிய பொருளை மிக்சி ஜாரில் சேர்த்து பேஸ்ட் போல அரைக்கவும்.
மஞ்சள்தூள்- 1/4 ஸ்பூன் கடைசியாக கடாயில் எண்ணெய் சேர்த்து அதில் அரைத்து வைத்துள்ள பேஸ்ட், மசாலா பொடிகள் மற்றும் வேக வைத்து வைத்துள்ள பச்சை பட்டாணி, உருளைக்கிழங்கு, தேவையான அளவு உப்பு சேர்த்து மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கினால் மசாலா தயார்.
மல்லித்தூள்- 1 ஸ்பூன்
மிளகாய் தூள்- 1 1/2 ஸ்பூன்
சீரகத்தூள்- 1/2 ஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
மசாலா பூரி தயார் அதன் பிறகு வழக்கமாக நீங்கள் பூரி செய்வது போல் செய்து இரண்டு பூரிக்கும் நடுவே இந்த மசாலாவை வைத்து சாப்பிட வேண்டியது தான். (அ) பானி பூரிக்கும் இந்த மசாலைவை வைத்து சாப்பிடலாம்.

Chilli Chapathi Recipe in Tamil

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்!!!
Advertisement