மட்டன் சுவையை மிஞ்சும் சுவையான சைவ மீல்மேக்கர் மஞ்சூரியன் இப்டி செய்ங்க அடிக்கடி செய்வீங்க…

Advertisement

Meal Maker Manchurian

புரட்டாசி மாசம் தொடங்கிடுச்சி, இனி Non-Veg சாப்பிட முடியாதுனு கவலை படுபவர்களுக்கான இந்த பதிவு. நாம் வாய்க்கு ருசியாக சாப்பிட வேண்டும் என்று நினைத்தால் உடனே நினைவு வருவது Non- Veg உணவுகள் மட்டும் தான். ஆமாங்க, கார சாரமாக சாப்பிட நினைப்பவரும் Non -Veg உணவுகளையே விரும்புவார்கள். ஆனால் அந்த அசைவ சுவையில் சைவ உணவுகளை இந்த ஒரு மாதத்திற்கு சாப்பிட வேண்டிய சூழ்நிலையில் இப்போது இருக்கின்றோம். வாருங்கள் அசைவ சுவையில் மட்டனை மிஞ்சும்  மீல்மேக்கர் மஞ்சூரியன் செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்ப்போம்.

மீல்மேக்கர் மஞ்சூரியன் செய்வது எப்படி ?

மீல்மேக்கர் மஞ்சூரியன் செய்வதற்கு

தேவையான பொருட்கள்:

மீல் மேக்கர் – 1 கப்
சோள மாவு – 3 ஸ்பூன்
அரிசி மாவு – 1 ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன்
மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
தயிர் – 2 ஸ்பூன்
நறுக்கிய குடை மிளகாய் – அரை
நறுக்கிய வெங்காயம் – 1
பொடியாக நறுக்கிய இஞ்சி 1 ஸ்பூன்
பொடியாக நறுக்கிய பூண்டு 1 ஸ்பூன்
சோயா சாஸ் 1 ஸ்பூன்
சில்லி சாஸ் 1 ஸ்பூன்
மிளகுத் தூள் 2 ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

மீல்மேக்கர் மஞ்சூரியன் செய்முறை:

meal maker manchurian recipe in tamil

  • முதலில் வெந்நீரில் மீல் மேக்கரை போடவும் அதில் சிறிது உப்புச் சேர்த்து 5 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும்.
  • பின் மீல் மேக்கரை சாதரண தண்ணீரில் நன்கு அலசி, தண்ணீரை வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
  • பின்னர், ஒரு பாத்திரத்தில் நீங்கள் வடிகட்டி எடுத்த மீல் மேக்கர் சேர்த்து அதனுடன் 2 ஸ்பூன் சோள மாவு  2 ஸ்பூன் அரிசி மாவு சிறிதளவு உப்பு, 1/2 ஸ்பூன் மிளகுத் தூள் 1 ஸ்பூன் மிளகாய் தூள் அதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் தயிர் கலந்து நன்றாக மிக்ஸ் செய்துக்கொள்ளவும். அதனை 15 நிமிடம் ஊறவைத்து பிறகு, எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
  • அடுத்ததாக, 1 டம்ளர் தண்ணீரில் 1 ஸ்பூன் சோளமாவு கலந்து நன்கு கரைத்து கொள்ளவும்.
  • பின்னர், கடாயில் தேவையான அளவு எண்ணெயை ஊற்றி, அதில் இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி கொள்ளவும். அதனுடன் வெங்காயம் மற்றும் குடை மிளகாயை சேர்த்து 2 நிமிடம் வதக்கி அதில் சில்லி சாஸ், சோயா சாஸ், மிளகுத் தூள், தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும்.
  • இப்போது அதில் பொரித்து வைத்துள்ள மீல் மேக்கரை சேர்த்து, 2 நிமிடம் வதக்கி வேண்டும். பிறகு, அதனுடன் தண்ணீரில் கரைத்த சோள மாவைக் ஊற்றி கலந்து விடவும்.
  • ஊற்றிய தண்ணீர் கெட்டியாக மாறும் வரை வதக்கவும். கடைசியாக சிறு துளி  எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கலக்கவும்.
  • அதனுடன் வெங்காயத்தாள் சேர்த்து இறக்கவும். இப்போது சுவையான மீல்மேக்கர் மஞ்சூரியன் ரெடி.

இந்த புரட்டாசி மாதத்திற்கு ஏற்ற உணவுவகைகளில் இதுவும் ஒன்று. இது போன்ற சுவையான புரட்டாசி மாத ஸ்பெஷல் உணவுகள் பற்றி தெரிந்துகொள்ள எங்கள் தளத்தை பின்தொடருங்கள்.

புரட்டாசி வந்துடுச்சு கறி குழம்பு சாப்பிடணும் போல இருக்கா.! அப்போ இந்த குழம்பு வச்சு சாப்பிடுங்க..

புரட்டாசில மட்டன் கோலா உருண்டை சாப்புட முடியலயா..? அப்போ வாங்க அதே டேஸ்ட்ல வெஜ் கோலா உருண்டை செய்யலாம்..!

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil
Advertisement