Pepper Rice Recipe in Tamil
பொதுவாக கல்லூரி, பள்ளி மற்றும் வேலைக்கு செல்லும் நபர்கள் என இவர்களுக்கு எல்லாம் மதிய நேர உணவு வீட்டில் இருந்து எடுத்து செல்லும் பழக்கமானது இன்றளவும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் தயிர் சாதம், லெமன் சாதம், புளியோதரை, தக்காளி சாதம், உருளைக்கிழங்கு சாதம், சாம்பார் சாதம் மற்றும் புளிக்குழம்பு சாதம் என எப்போதும் இத்தகைய மெனு தான் எல்லோருடைய வீடுகளிலும் இருக்கிறது. எத்தனை நாள் தான் இதுபோல ஒரே ரெசிபியை சாப்பிடுவார்கள். அதனால் தான் இன்று சற்று வித்தியாசமான மற்றும் சுவையான முறையில் ஒரு ரெசிபியான மிளகு சாதம் செய்வது எப்படி என்பதை தெரிந்துக்கொள்ள போகிறோம்.
மிளகு சாதம் செய்வது எப்படி..?
பொருட்களின் அளவு |
செய்முறை விளக்கம் |
மிளகு, சீரகம்- 1 ஸ்பூன் |
முதலில் ஒரு மிக்சி ஜாரில் மிளகு மற்றும் சீரகத்தை சேர்த்து நன்றாக பவுடர் போல அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். |
வடித்த சாதம்- 1 கப் |
அதன் பிறகு வடித்த சாதம் 1 கப்பில் தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும். |
முந்திரி- 5 |
இப்போது அடுப்பில் ஒரு கடாயினை வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து கறிவேப்பிலை மற்றும் முந்திரியை போட்டு நன்றாக வதக்க வேண்டும். |
எண்ணெய்- தேவையான அளவு |
கறிவேப்பிலை- சிறிது |
சாதம், உப்பு |
பின்பு வடித்த சாதம் மற்றும் மிளகு தூள் பவுடர், தேவையான அளவு உப்பு என இவற்றை எல்லாம் கடாயில் சேர்த்து நன்றாக 5 நிமிடம் வரை கலந்து கொள்ள வேண்டும். |
மிளகு சாதம் ரெடி |
10 நிமிடம் கழித்து கொத்தமல்லி சேர்த்து சாதத்தை இறக்கினால் மிளகு சாதம் ரெடி. |
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> |
சமையல் குறிப்புகள்!!! |