தீபாவளிக்கு இதவிட ஈசியா யாராலும் லட்டு செய்ய முடியாதுங்க! கண்டிப்பாக ட்ரை பண்ணுங்க..!

Advertisement

லட்டு செய்யும் முறை – Motichoor Ladoo Recipe

பொதுவாக ஸ்வீட் என்றால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த ஸ்வீட்டினை பெரும்பாலும் மகிழ்ச்சியான நேரங்களில் கடையில் வாங்குவார்கள் அல்லது வீட்டில் செய்வார்கள். அந்த ஸ்வீட் வகையில் இடம்பெற்ற ஓன்று தான் லட்டு. பெரும்பாலானவர்களுக்கு லட்டு மிகவும் பிடித்தமான ஸ்வீட் ஆகும். ஆக உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு லட்டு மிகவும் பிடிக்கும் என்றால் கண்டிப்பாக இந்த தீபாவளிக்கு மோத்திசூர் லட்டு செய்து பாருங்கள். உங்களுக்கு மோத்திசூர் லட்டு செய்ய தெரியாது என்றால் ஒன்றும் கவலைப்பட வேண்டாம், உங்களுக்காக தான் அதனுடைய செய்முறை விளக்கத்தை இங்கு பதிவு செய்துள்ளோம். சரி வாங்க இந்த லட்டு செய்ய என்னென்ன பொருட்கள் தேவைப்படும், எப்படி செய்ய வேண்டும் என்று இப்பொழுது பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

  • கடலை மாவு – 250 கிராம்
  • தண்ணீர் – 400 ml
  • புட்கலர் – ஒரு பின்ச்
  • சர்க்கரை – 500 கிராம்
  • எண்ணெய் – 1/2 கிட்டார்

செய்முறை:

ஒரு பவுலை எடுத்துக்கொள்ளுங்கள் அதில் 250 கிராம் கடலை மாவு மற்றும் 400 ml தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து கட்டிகள் இல்லாதவாறு நன்கு கலந்துகொள்ளுங்கள்.

பின்பு அதனுடன் ஒரு பின்ச் புட்கலர் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யுங்கள்.

பின் அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் 1/2 லிட்டர் எண்ணெய் ஊற்றி நன்கு சூடுபடுத்தவும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வீட்டில் முறுக்கு மாவு இப்படி அரைத்து பாருங்கள்..! முறுக்கு மொறுமொறுன்னு டேஸ்டா இருக்கும்..!

எண்ணெய் சூடாவதற்குள் ஓரு பாலிதீன் கவரை எடுத்துக்கொள்ளுங்கள் அவற்றில் நாம் கலந்து வைத்துள்ள மாவை ஊற்றி அடி பகுதியின் ஓரத்தில் சிறிய அளவில் ஓட்டை போட்டுக்கொள்ளுங்கள்.

பின் எண்ணெய் சூடானதும் கவரில் ஊற்றி வைத்துள்ள மாவை அந்த ஓட்டையின் வழியாக எண்ணியில் பீச்சிவிடவும். இது போன்று கொஞ்சம் கொஞ்சமாக பீச்சிவிட்டு பொரித்து எடுத்துக்கொள்ளுங்கள்.

அதன் பிறகு அடுப்பில் ஒரு அகலமான பாத்திரத்தை வைத்து அதில் 500 கிராம் சர்க்கரை 250 ml தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்துவிடுங்கள். கொத்தி வந்ததும் சிறிதளவு புட்கலர், ஏலக்காய் பவுடர் ஒரு ஸ்பூன், நெய் இரண்டு டேபிள் ஸ்பூன் இவை அனைத்தையும் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கோதுமை மாவை பயன்படுத்தி முறுக்கு செய்வது எப்படி என்று பார்ப்போம் …!

பிறகு பொரித்து வைத்துள்ள பூந்தியை அந்த சர்க்கரை பாகில் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து இரண்டு நிமிடக்கம் கொதிக்க வைக்கவும், பிறகு அடுப்பை அணைத்து 1/2 மணி நேரம் நன்கு ஊறவைக்கவும்.

1/2 மணி நேரம் கழித்து திறந்து பார்த்தால் லட்டு பிடிப்பதற்கு பூந்திகள் சர்க்கரை பாகில் நன்கு ஊறி இருக்கும், அதனை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எடுத்தால் போதும் மோத்திசூர் லட்டு தயார். மிக எளிமையாக செய்து விடலாம் வெறும் 2 மணி நேரத்திற்குள்ளேயே இந்த லட்டை தாயர் செய்துவிடலாம்.

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்!!!
Advertisement