Mullangi Paratha Recipe in Tamil
வணக்கம் நண்பர்களே.. இப்பதிவில் ஒரு அருமையான ரெசிபி பற்றி தான் பார்க்கப்போகிறோம். முள்ளங்கியில் அதிக சத்துக்கள் இருக்கிறது என்று நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், முள்ளங்கையை பெரும்பாலான குழந்தைகள் சாப்பிட விரும்ப மாட்டார்கள். பொதுவாக முள்ளங்கியில் பெரும்பாலும் சாம்பார் வைக்க பயன்படுத்துவார்கள். இதனை தவிர்த்து முள்ளங்கி சட்னி செய்வார்கள். இதனை பெரும்பாலான குழந்தைகள் சாப்பிட மறுப்பார்கள். ஆனால், முள்ளங்கியில் பராத்தா செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். ஓகே வாருங்கள் முள்ளங்கி பராத்தா செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
How To Make Mullangi Paratha in Tamil:
தேவையான பொருட்கள்:
மாவு செய்ய தேவையான பொருட்கள்:
- கோதுமை மாவு – 2 கப்
- ஓமம் – 1/2 தேக்கரண்டி
- உப்பு – 1/2 தேக்கரண்டி
- தண்ணீர் – தேவையான அளவு
- எண்ணெய் – 1 ஸ்பூன்
பராட்டா செய்ய தேவையான பொருட்கள்:
- முள்ளங்கி – 4
- ஓமம் – 1/4 ஸ்பூன்
- சீரகம் – 1/2 ஸ்பூன்
- இஞ்சி – 1 டீஸ்பூன்
- பச்சை மிளகாய் – 2
- மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
- கரம் மசாலா தூள் – 1/2 தூள்
- ஆம்சூர் தூள் – 1/2 ஸ்பூன்
- கொத்தமல்லி இலை – சிறிதளவு
- எண்ணெய் – தேவையான அளவு
- உப்பு – தேவையான அளவு
செய்முறை:
மாவு பிசையும் முறை:
முதலில் அகலமான ஒரு பாத்திரத்தை எடுத்து கொள்ளுங்கள். அதில், மாவு செய்ய தேவையான பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள். இறுதியாக மாவின் மேல் 1 ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் சேர்த்து 20 நிமிடம் வரை ஊறவைத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் -1
முதலில், முள்ளங்கியை கழுவி அதன் தோலை நீக்கிவிட்டு துருவி எடுத்து கொள்ளுங்கள். இதனை ஒரு கிண்ணத்தில் சேர்த்து 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து 15 நிமிடம் அப்படியே வைத்து விடுங்கள்.
ஸ்டேப் -2
15 நிமிடம் கழித்து முள்ளங்கியை நன்றாக பிழிந்து அதன் சக்கையை மட்டும் எடுத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் -3
அடுத்து, அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் 2 ஸ்பூன் அளவிற்க்கு எண்ணெய் சேர்த்து கொள்ளுங்கள். எண்ணெய் சூடானதும் அதில், சீரகம் மற்றும் ஓமம் சேர்த்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் -4
பிறகு, இதில் பொடியாக நறுக்கிய இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து கிளறி விடுங்கள். இந்நிலையில், சாறு நீக்கி வைத்துள்ள முள்ளங்கியை சேர்த்து 2 நிமிடம் கிளறி விடுங்கள்.
ஸ்டேப் -5
அதன் பிறகு, இதில் மிளகாய் தூள், கரம் மசாலா தூள் மற்றும் ஆம்சூர் தூள் சேர்த்து 5 வதக்கி கொள்ளுங்கள். இறுதியாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கி விடுங்கள்.
ஸ்டேப் -6
இப்போது, பிசைந்து வைத்துள்ள மாவை பெரிய உருண்டையாக பிடித்து சப்பாத்தி போல் தேய்த்து அதன் நடுப்பகுதியில் தயார் செய்து வைத்துள்ள முள்ளங்கி மசாலாவை வைத்து உருண்டையாக உருட்டி மீண்டும் சப்பாத்தி போல் தேய்த்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் -6
அடுத்து, அடுப்பில் ஒரு தோசை கல்லை வைத்து எண்ணெய் ஊற்றி தயார் செய்து வைத்துள்ள பாராட்டாவை சேர்த்து இருபுறமும் நெய் தடவி சிவற விட்டு எடுத்தால் சுவையான முள்ளங்கி பாராட்டா ரெடி.!
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள்!!! |