அட்டகாசமான முருகைக்காய் கறி, அதுவும் கேரளா Special சுவையில்

Advertisement

முருங்கையை தேங்காய் மசாலா கறி 

உணவு, அது தானே எல்லாம். நாம் தினந்தினம் சமைக்கின்றோம். அதனால் சமைத்த உணவை மீண்டும் சமைக்க நமக்கு பிடிப்பது இல்லை. அதனால் ஏதேனும் புதியதாக செய்ய நினைக்கும் உங்களுக்காக இந்த பதிவு. வீட்டில் இருந்தே சுவையான கேரளா ஸ்டைலில் ஒரு குருமா. கேரளா என்றால் அங்கு பிரசித்திபெற்றது தேங்காய் தான். அந்த தேங்காவை கொண்டு எண்ணற்ற வகையான உணவுகளை செய்யலாம். அந்த வகையில் இன்று நாம் அதிகம் பயன்படுத்தும் ஒரு வகை காய்யான முருங்கைக்காயையும் தேங்காவையும் வைத்து அருமையான ஒரு ரெசிபி அதுவும் கேரளாவின் ஸ்பெஷல் சுவையில் முருகைக்காய் தேங்காய் கறி எப்படி செய்வது என்று பார்க்கலாம். முருகைக்காய் கறி, செய்வதற்கான ஈஸியான செய்முறை விளக்கத்தை கீழே படித்து தெரிந்து கொள்ளுங்கள். சரி வாங்க இப்போ இந்த ரெசிபியை எப்படி செய்யலாம்னு பார்க்கலாம்..!

முருங்கைக்காய் மசாலா கறி செய்வது எப்படி?

முருங்கைக்காய் கறி

முருங்கைக்காய் கறி தேவையான பொருட்கள்:

முருங்கைக்காய் – 3
துருவிய தேங்காய் – 1 கப்
சீரகம் – 3/4 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
பூண்டு கிராம்பு – 5
பச்சை மிளகாய் – 2
தக்காளி – 1
உப்பு – தேவைக்கு ஏற்ப
எண்ணெய் – 2 டீஸ்பூன்
வெங்காயம் – 2
கடுகு – 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் -2
கறிவேப்பிலை – சிறிதளவு

முருங்கைக்காய் கறி செய்முறை:

drumstick curry

முதலில் துருவிய தேங்காய், சீரகம், மஞ்சள்தூள், பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

பிறகு, ஒரு கடாயில், சிறிது சிறிதாக வெட்டிய முருங்கைக்காயுடன் உப்பு சேர்த்து 10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

வெந்த காயை தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

இப்போது அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை முருங்கைக்காயுடன் சேர்த்து பிசைந்து சிறிது நேரம் வைக்க வேண்டும்.

drumstick curry recipe

பின்னர் மற்றொரு கடாயில் எண்ணெயை சூடாக்கி கடுகு போட்டு வெடிக்க விடவும். பின்னர் நறுக்கிய தக்காளியை, வெங்காயம் மிளகாய் சேர்த்து வதக்கவும்.

பின்னர் நீங்கள் வேகவைத்து மசாலா சேர்த்து வைத்துள்ள முருகைக்காயை அதனுடன் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.

இப்போது சுவையான கேரளா ஸ்டைல் முருகைக்காய் தேங்காய் மசாலா கறி ரெடி.

அல்வா வாங்க இனி கடைக்கு போக வேண்டாங்க…உங்க வீட்டிலே 10 நிமிசத்துல ரெடி…

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil

Advertisement