Murukku Maavu Recipe in Tamil
தீபாவளி என்றாலே முறுக்கு தான் முதலில் நினைவிற்கு வரும். ஏனென்றால், தீபாவளிக்கு எந்த பலகாரம் செய்கிறோமோ இல்லையோ முதலில் முறுக்கை சுட்டு விடுவோம். அதிலும், முறுக்கு மொறுமொறுப்பாக இருந்தால் தான் அனைவர்க்கும் பிடிக்கும். ஆனால், நம்மில் பெருமபாலானோர்க்கு முறுக்கு மாவு எப்படி செய்வது என்பது தெரிவதில்லை. எனவே, உங்களுக்கு பயனுள்ள வகையில் இப்பதிவில் முறுக்கு மொறு மொறுன்னு வருவதற்கு முறுக்கு மாவு எப்படி தயார் செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
How To Make Murukku Maavu in Tamil:
தேவையான பொருட்கள்:
- மாவு பச்சரிசி – 1 கிலோ
- வெள்ளை உருட்டு உளுந்து – 1/4 கிலோ
- பொட்டுக்கடலை – 75 கிராம்
- உப்பு – 2 ஸ்பூன்
- பெருங்காயத்தூள் – 1 ஸ்பூன்
- எள் – 1 ஸ்பூன்
- சீரகம் – 1 ஸ்பூன்
- வெண்ணெய் – 3 ஸ்பூன்
- தண்ணீர் – முறுக்கு மாவு பதத்திற்கு ஏற்ப
முறுக்கு மாவு அரைக்கும் முறை:
முதலில், பச்சரிசியை எடுத்து ஒன்றிற்கு இரண்டு கழுவி தண்ணீரை வடிகட்டி 10 மணிநேரம் வரை வெயிலில் நன்கு காயவைக்க வேண்டும்.
அதன் பிறகு, அடுப்பில் ஒரு வாணலை வைத்து வெள்ளை உளுந்தை சேர்த்து நன்கு சிவரும் வரை வறுத்து எடுத்து கொள்ளுங்கள்.
இதனை சிறிது நேரம் ஆறவைத்து ஒரு பெரிய பாத்திரத்தில் எடுத்து கொள்ளுங்கள். இதனுடன், காயவைத்துள்ள பச்சரிசி மற்றும் பொட்டுக்கடலையை சேர்த்து மில்லில் கொடுத்து அரைத்து வாங்கி கொள்ளுங்கள்.
மில்லில் அரைத்து வாங்கி வந்ததும் சிறிது நேரம் உலரவைத்து காற்றுப்புகாத பாத்திரத்தில் சேர்த்து வைத்து கொள்ளுங்கள்.
அதன் பிறகு, முறுக்குசுடும்போது இதனை எடுத்து பயன்படுத்தி கொள்ளலாம்.
தீபாவளிக்கு புதுசா முந்திரி பாதாம் கட்லி செய்து பாருங்க..!
முறுக்கு மாவு செய்முறை:
முதலில், ஒரு பெரிய அகலமான பாத்திரத்தை எடுத்து கொள்ளுங்கள். இதில் அரைத்து வைத்துள்ள முறுக்கு மாவினை சேர்த்து கொள்ளுங்கள்.
அடுத்து, அரை டம்ளர் தண்ணீரில் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கரைத்து மாவில் ஊற்றி கொள்ளுங்கள். இதனுடன் பெருங்காயத்தூள், எள், சீரகம், வெண்ணெய் ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசைந்து எடுத்து கொள்ளுங்கள்.
அதாவது, மாவு முறுக்கு சுடும் அளவிற்கு வரும்வரை பிசைந்து கொள்ளுங்கள்.
இறுதியாக, தயார் செய்து வைத்துள்ள மாவினை முறுக்கு அச்சில் சேர்த்து முறுக்கு சுட்டு எடுங்கள்.
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள்!!! |