Murungakkai Kara Kulambu Seivathu Eppadi
என்ன தான் நம்முடைய வீட்டில் வித விதமாக சமைத்து இருந்தாலும் கூட காரா குழம்பு இல்லையே என்ற ஒரு சிறிய வருத்தம் இருக்கும். அதிலும் குறிப்பாக வெளியில் ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்கு செல்லும் போது பாயாசம் சாப்பிடுகிறோமோ இல்லையோ ஆனால் கார குழம்பு மட்டும் தவறாமல் கேட்டு வாங்கி சாப்பிட்டு வருவோம். ஏனென்றால் சாம்பார், புளிக்குழம்பு பிரியர்களை விட கார குழம்பு பிரியர்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக முருங்கைக்காய் கார குழம்பு என்றால் சொல்லவே வேண்டாம் டேஸ்டா டேஸ்டாக இருக்கும். ஆனால் எல்லாருக்கும் சின்ஹா குழம்பு வைக்க தெரியாதா. ஆகையால் இன்றைய சமையல் குறிப்பு பதிவில் சுலபமான மற்றும் டேஸ்டாக எப்படி முருங்கைக்காய் கார குழம்பு வைப்பது எப்படி என்பதை தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
முருங்கைக்காய் கார குழம்பு:
- முருங்கைக்காய்- 2
- சின்ன வெங்காயம்- 7
- பெரிய வெங்காயம்- 1
- பூண்டு- 5
- சீரகம்- 1 ஸ்பூன்
- கடுகு- 1 ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு- 1/2 ஸ்பூன்
- புளி கரைசல் – சிறிதளவு
- மிளகாய் தூள்- காரத்திற்கு ஏற்ப
- உப்பு- தேவையான அளவு
- எண்ணெய்- தேவையான அளவு
வறுத்து அரைக்க தேவையான பொருட்கள்:
- தேங்காய்- 1/4 கப்
- சீரகம்- 1 ஸ்பூன்
- மிளகு- 1 ஸ்பூன்
- மல்லி- 1 ஸ்பூன்
- உளுத்தம்பருப்பு- 1 ஸ்பூன்
- கடலை பருப்பு- 1 ஸ்பூன்
- சோம்பு- 1 ஸ்பூன்
மேலே சொல்லப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தினையும் நன்றாக வறுத்து மிக்சி ஜாரில் சேர்த்து பேஸ்ட்டாக அரைத்து கொள்ள வேண்டும்.
முருங்கைக்காய் கார குழம்பு எப்படி வைப்பது:
முதலில் எடுத்துவைத்துள்ள முருங்கைக்காய் மற்றும் பெரிய வெங்காயத்தை நன்றாக அலசி நறுக்கி வைத்து கொள்ள வேண்டும். அதன் பிறகு சின்ன வெங்காயத்தை முழுதாக தோல் உரித்து வைக்க வேண்டும்.
இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்த பிறகு சீரகம், கடுகு மற்றும் உளுத்தம் பருப்பினை சேர்த்து நன்றாக 2 நிமிடம் வரை வதக்கவும்.
2 நிமிடம் கழித்த பிறகு நறுக்கிய சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் மற்றும் முருங்கைக்காயினை சேர்த்து 5 நிமிடம் வரை பொன் நிறமாக வறுத்துக்கொள்ளுங்கள்.
5 நிமிடம் கழித்த பிறகு கடாயில் உள்ள பொருளுடன் அரைத்துள்ள வைத்துள்ள மசாலா, மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு மற்றும் புளி கரைசலை சேர்த்து அதனுடன் சிறிதளவு தண்ணீரும் விட்டு நன்றாக கொதிக்க விடுங்கள்.
அடுப்பில் உள்ள குழம்பு நன்றாக கொதித்து முருங்கைக்காய் வெந்த பிறகு கறிவேப்பிலை சேர்த்து இறக்கினால் போதும் சுவையான முருங்கைக்காய் கார குழம்பு தயார்.
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |