வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

முருங்கைக்காய் பொரியல் இப்படி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் செமயா இருக்கும்..!

Updated On: September 28, 2023 1:08 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

Murungakkai Poriyal Seivathu Eppadi

முருங்கைக்காயை கால்சியம், இரும்புசத்து, வைட்டமின்கள் போன்ற ஏராளமான சத்துக்கள் உள்ளன. அதுமட்டுமில்லாமல் இதனை உட்கொள்வதால் உடலில் ஏற்படும் பலவிதமான ஆரோக்கிய பிரச்சனைகளும் எளிதில் நீங்கிவிடும். எனவே, இதனை பெரும்பாலும் சாம்பார், புளிக்குழம்பு போன்றவற்தற்றில் சேர்த்து சமைப்பார்கள். ஆனால் ஒரு சிலர் குழம்பில் போட்ட முருங்கைக்காயை சாப்பிட மாட்டார்கள். அப்படி இருப்பவர்களுக்கு முருங்கைக்காயில் பொரியல் செய்து கொடுத்தால் நன்றாக சாப்பிடுவார்கள். முருங்கைக்காய் பொரியல் எப்படி செய்வது என்று தானே கேட்கிறீர்கள்.. இதோ உங்களுக்காகவே இப்பதிவில் முருங்கைக்காய் பொரியல் செய்வது எப்படி எனபதை தான் பார்க்கப்போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

முருங்கைக்காய் பொரியல் செய்வது எப்படி.?

 murungakkai poriyal seimurai

தேவையான பொருட்கள்:

  • முருங்கைக்காய் – 5
  • தேங்காய் எண்ணெய் – 2 ஸ்பூன் 
  • கடுகு – 1 ஸ்பூன் 
  • கறிவேப்பிலை – 2 கொத்து 
  • பச்சை மிளகாய் – 3
  • மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன் 
  • பட்டமிளகாய் – 2
  • தேங்காய் துருவல் – 1/2 கப் 
  • உப்பு – சுவைக்கேற்ப

கேரட் சாப்பிடாத குழந்தைகளுக்கு இந்த கேரட் பஜ்ஜி செய்து கொடுங்கள்..!

Murungakkai Poriyal Seimurai:

ஸ்டேப் -1

முதலில் முருங்கைக்காயை நன்றாக கழுவிவிட்டு அதனை நறுக்கி எடுத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப் -2

இப்போது, அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் 1 டம்ளர் அளவிற்கு தண்ணீர் சேர்த்து கொள்ளுங்கள். தண்ணீர் சூடானதும் அதில் நறுக்கி வைத்துள்ளது முருங்கைக்காயை சேர்த்து கொள்ளுங்கள். 

முருங்கைக்காய் பொரியல்

ஸ்டேப் -3

இதனுடன் மஞ்சள் தூள் மற்றும் தேவையான உப்பு சேர்த்து 5 நிமிடம் வேகவிடவும். (முருங்கைக்காய் அதிகமாக வேக வைப்பதை தவிர்க்க வேண்டும்.)

ஸ்டேப் -4

அடுத்து, இதனை தண்ணீர் இல்லாமல் வடிகட்டி ஒரு பாத்திரத்தில் எடுத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப் -5

இப்போது, அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் தேங்காய் எண்ணெய் சேர்த்து கொள்ளுங்கள். எண்ணெய் சூடானதும் அதில் கடுகு சேர்த்து பொரிய விடுங்கள்.

ஸ்டேப் -6

அதன் பிறகு, அதில் பட்டமிளகாய், கருவேப்பிலை மற்றும் வேகவைத்து வைத்துள்ள முருங்கைக்காய் சேர்த்து கிளறி விடுங்கள்.

ஸ்டேப் -7

அடுத்து, தேங்காய் துருவல் மற்றும் பச்சை மிளகாயை மிக்ஸி ஜாரில் சேர்த்து பேஸ்டாக அரைத்து முருங்கைக்காயில் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால் சூப்பரான முருங்கைக்காய் பொரியல் ரெடி..!

புரட்டாசில மட்டன் குழம்பு செய்ய முடியலையா.. அப்போ இந்த குழம்ப செஞ்சு பாருங்க.. மட்டன் குழம்பயே மிஞ்சிடும்..

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now