Murungakkai Soup Seivathu Eppadi
பொதுவாக நாம் அனைவருக்குமே இந்த உலகில் ஆரோக்கியமாக உயிர்வாழ்வதற்கு உணவு என்பது மிக மிக முக்கியமான ஒன்று. உணவு என்பது இல்லை என்றால் நாம் ஆரோக்கியமாக உயிர்வாழ்வது என்பது சிறிதளவு கஷ்டம். அதனால் அனைவருமே உணவு விஷயத்தில் மிக மிக கவனமாக இருப்பார்கள். ஆளு ஒரு சிலர் இந்த உலகில் உள்ள அனைத்து உணவுகளையும் ரசித்து உட்கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். அதனால் அனைத்து உணவுகளையும் தேடி தேடி சாப்பிடுவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கத்தில் தான் நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு புதுமையான உணவுகளை எவ்வாறு செய்வது என்பதை பற்றி விரிவாக பார்த்து கொண்டு வருகின்றோம். அதேபோல் இன்றைய பதிவில் மிகவும் ருசியான முருங்கைக்காய் சூப் செய்வது எப்படி என்பதை பற்றி விரிவாக காணலாம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
முருங்கைக்காய் சூப் செய்வது எப்படி..?
மிகவும் ருசியான மற்றும் மிகவும் ஆரோக்கியமான முருங்கைக்காய் சூப் செய்வது எப்படி என்பதை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க. அதற்கு முன்பு அதற்கு தேவையான பொருட்களை பற்றி முதலில் பார்க்கலாம்.
- முருங்கைக்காய் – 3
- பூண்டு – 4 பற்கள்
- பச்சை மிளகாய் – 1
- சீரகம் – 2 டேபிள் ஸ்பூன்
- மிளகுத்தூள் – 1 டேபிள் ஸ்பூன்
- சின்ன வெங்காயம் – 15
- தக்காளி – 1
- கொத்தமல்லி இலை – சிறிதளவு
- சோளமாவு – 1 டேபிள் ஸ்பூன்
- வெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- தண்ணீர் – தேவையான அளவு
கேரட் பிடிக்காதவங்க கூட திரும்ப திரும்ப கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க இப்படி செஞ்சி கொடுத்தா
செய்முறை:
ஸ்டேப் – 1
முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து நாம் எடுத்து வைத்துள்ள 3 முருங்கைக்காய்களை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி சேர்த்து நன்கு வேகவைத்து எடுத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 2
பின்னர் அதில் உள்ள சதைப்பகுதியை மட்டும் தனியாக பிரித்து எடுத்து ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நன்கு பசைபோல் அரைத்து அதனை நாம் முருங்கைக்காய் வேகவைத்த தண்ணீருடன் சேர்த்து நன்கு கலந்து வைத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 3
அடுத்து ஒரு மிக்சி ஜாரை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 4 பற்கள் பூண்டு, 1 பச்சை மிளகாய் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் சீரகம் ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து கொள்ளுங்கள்.
Non Veg-யே மிஞ்சிடும் சுவையில் Veg Chicken நக்கெட்ஸ் செய்வது எப்படி
ஸ்டேப் – 4
பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் வெண்ணெய்யை சேர்த்து அதனுடன் நாம் முன்னரே அரைத்து வைத்துள்ள பூண்டு, பச்சை மிளகாய் பசையை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 5
அதனுடனே 15 சின்ன வெங்காயம், 1 தக்காளி மற்றும் சிறிதளவு கொத்தமல்லி இலை ஆகியவற்றை நன்கு பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கி கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் நாம் வேகவைத்து அரைத்து வைத்துள்ள முருகைக்காய் கலவையை சேர்த்து தேவையான அளவு தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்கவிடுங்கள்.
ஸ்டேப் – 6
பின்னர் இந்த சூப்புக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடுங்கள். அடுத்து இதில் 1 டேபிள் ஸ்பூன் சோளமாவினை தேவையான அளவு தண்ணீரை சேர்த்து கலந்து ஊற்றி நன்கு கொதிக்கவிடுங்கள்.
இறுதியாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை மற்றும் 1 டேபிள் ஸ்பூன் மிளகுத்தூள் ஆகியவற்றை சேர்த்து இறக்கினால் நமது சுவையான மற்றும் ஆரோக்கியமான முருகைக்காய் சூப் தயாராகிவிட்டது.
வாங்க சுவைக்கலாம்.. நிங்களும் இதனை உங்கள் வீட்டில் செய்து சுவைத்து பாருங்கள்.
புரட்டாசி வந்துடுச்சு கறி குழம்பு சாப்பிடணும் போல இருக்கா அப்போ இந்த குழம்பு வச்சு சாப்பிடுங்க
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |