முருங்கைக்காய் வறுவல் எப்படி செய்வது
முருங்கைக்காய் என்றால் பிடிக்காத ஆட்களே இல்லை. அத்தகைய முருங்கைக்காயை வைத்து இதுவரை புளிக் குழம்பு, சாம்பார் என்று தான் செய்து சாப்பிட்டிருப்போம். இந்த முருங்கைக்காயை வைத்து வேறு ஏதும் சமைக்க முடியாத என்கிறவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். முருங்கைக்காயை வைத்து ஈஸியான முறையில் வறுவல் செய்து சாப்பிடலாம். இது மிகவும் சுவையானதாக இருக்கும். இப்போது முருங்கைக்காய் வறுவலை எப்படி செய்வதென்று பார்ப்போமா.!
முருங்கைக்காய் வறுவல் செய்ய தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை:

முருங்கைக்காய் வறுவல் செய்ய தேவையான பொருட்கள் |
முருங்கைக்காய் வறுவல் செய்முறை |
முருங்கைக்காய்- 5 |
முதலில் முருங்கைக்காயின் மேல் தோல் பகுதியில் உள்ள தோலை சீவி குழம்புக்கு நறுக்குவது போல் நறுக்கி கொள்ளவும். |
வெங்காயம் -3 |
பூண்டு -10 பற்கள் |
அதன் பிறகு கடாயில் நறுக்கி வைத்த முருங்கைக்காய், உப்பு, சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து வேக விடவும். |
மிளகாய் தூள் மஞ்சள் தூள் – 2 தேக்கரண்டி |
கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி |
வேகின்ற இடைவெளியில் வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு போன்றவற்றை நறுக்கி கொள்ளவும். |
மிளகு தூள் – 1/2 தேக்கரண்டி |
உப்பு- தேவையான அளவு |
அதன் பிறகு அடுப்பில் கடாய் வைத்து அதில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி, அதில் வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு போன்றவற்றை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும். |
கருவேப்பிலை – சிறிதளவு |
ஆயில் – 3 தேக்கரண்டி |
வெங்காயம் சிவந்த நிறம் வந்ததும், அதில் மிளகாய் தூள், கரம் மசாலா தூள். மிளகு தூள் சேர்த்து வதக்கி கொள்ளவும். பின் அதனுடன் வேக வைத்துள்ள முருங்கையையை சேர்த்து வதக்கி விடவும். மசாலாவின் பச்சை வாசனை நீங்கிய பிறகு அடுப்பிலிருந்து இறக்கி வேறொரு பாத்திரத்தில் சேர்த்து பரிமாறவும். |
கேரட் பிடிக்கதவுங்களுக்கு கூட இப்படி செய்து கொடுத்தால் வேணாமுன்னு சொல்லாம சாப்பிடுவாங்க