Mushroom Pakora Recipe
பொதுவாக அனைவருக்கும் மாலை நேரம் வந்தாலே சூடான டீயுடன் சுவையான ஸ்னாக்ஸ் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். அதிலும் குறிப்பாக காரசாரமான ஸ்னாக்ஸ் தான் சாப்பிட வேண்டும் போல தோன்றும். இவ்வாறு தோன்றியவுடன் நாம் அனைவரும் கடைகளுக்கு சென்று வெங்காய பக்கோடா, காளான் பக்கோடா மற்றும் காலிபிளவர் பக்கோடா என இதுபோன்ற பக்கோடா வகைகளை சாப்பிடுவோம். அதுவும் கடைகளில் விற்கும் ஸ்னாக்ஸினை நாம் எல்லா நேரத்திலும் வாங்கி சாப்பிட முடியாது. சரி வீட்டில் செய்யலாம் என்றாலும் அதற்கான சரியான அளவுகள் மற்றும் செய்முறை தெரியாமல் இருக்கும். அதனால் இன்று வீட்டிலேயே சுவையான மற்றும் மொறுமொறுப்பான மஷ்ரூம் பக்கோடா செய்வது எப்படி என்று தெரிந்துக்கொண்டு வீட்டிலேயே செய்து அசத்தலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
மஷ்ரூம் பக்கோடா:
- மஷ்ரூம்- 250 கிராம்
- பெரிய வெங்காயம்- 1
- சோம்பு- 1/2 ஸ்பூன்
- பச்சை மிளகாய்- 4
- இஞ்சி- 1 துண்டு
- கடலை மாவு- 1 கப்
- அரிசி மாவு- 1/4 கப்
- மிளகாய் தூள்- 1 ஸ்பூன்
- கரம் மசாலா தூள்- 1/2 ஸ்பூன்
- பூண்டு- 3 பல்
- உப்பு- தேவையான அளவு
- எண்ணெய்- தேவையான அளவு
மேலே சொல்லப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தினையும் சரியான அளவில் காளான் பக்கோடா செய்ய எடுத்துக்கொள்ளுங்கள்.
அப்பப்பா நாவூறும் மஷ்ரூம் பெப்பர் ஃப்ரை இப்படி செஞ்சு பாருங்க..
காளான் பக்கோடா செய்முறை:
முதலில் எடுத்துவைத்துள்ள மஷ்ரூமை நன்றாக தண்ணீரில் அலசி கொண்டு அதன் பிறகு டிஷ்யூ பேப்பர் அல்லது காட்டன் தூண்டி வைத்து துடைத்து கொள்ளுங்கள். அதன் பிறகு மஷ்ரூமை சிறு சிறு துண்டாக நறுக்கி பவுலில் வைத்து விடுங்கள்.
இப்போது எடுத்துவைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் இஞ்சியை நன்றாக தண்ணீரில் அலசி விட்டு சிறு சிறு துண்டாக நறுக்கி பவுலில் உள்ள மஷ்ரூமுடன் வைத்து கொள்ளுங்கள்.
அடுத்து எடுத்துவைத்துள்ள சோம்பு, மிளகாய் தூள், கரம் மசாலா தூள், கடலை மாவு, அரிசி மாவு மற்றும் தேவையான அளவு உப்பு என இந்த அனைத்தினையும் சேர்த்து நன்றாக உங்களுடைய கைகளால் 5 நிமிடம் பிசைந்து கொள்ளுங்கள்.
5 நிமிடம் கழித்து அதனுடன் கறிவேப்பிலை மற்றும் நசுக்கிய பூண்டு 3 பல் சேர்த்து கொள்ளுங்கள். இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கொள்ளுங்கள்.
கடாயில் உள்ள எண்ணெய் நன்றாக காய்ந்த பிறகு அதில் பவுலில் உள்ள காளானை பக்கோடா போல அதில் தூவிட்டு விட்டு நன்றாக பொன் நிறம் வரை வேக விடுங்கள். பின்பு பக்கோடா நன்றாக வெந்தவுடன் எண்ணெயில் இருந்து கரண்டியால் வெளியே எடுத்து விடுங்கள்.
இத்தகைய முறையில் பவுலில் உள்ள மற்ற காளானையும் எடுத்து விட்டால் போதும் சுவையான டேஸ்டில் மொறுமொறுப்பான மஷ்ரூம் பக்கோடா தயார்.
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal Kurippugal |