மஷ்ரூம் பெப்பர் ஃப்ரை
இன்றைய கால கட்டத்தில் பள்ளி படிக்கும் குழந்தைகளுக்கு மதியம் லஞ்சில் ஒரே மாதிரியான சைடிஸை செய்து கொடுக்கிறார்கள். அதாவது உருளைக்கிழங்கு வறுவல், வாழைக்காய் வறுவல், முட்டைகோஸ் கூட்டு போன்றவை தான் செய்து கொடுத்திருப்போம். அதனால் இந்த பதிவில் வித்தியாசமான சைடிஸை பற்றி தெரிந்து கொள்வோம். அதுவும் மஷ்ரூமில் பெப்பர் பிரை பற்றி தான் அறிந்து கொள்ள போகிறோம். தெரிந்து கொள்வதோடு மட்டுமில்லமால் ஒரு முறை செஞ்சு பாருங்க..
| உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
மஸ்ரூம் பெப்பர் பிரை செய்ய தேவையான பொருட்கள்:
- மஸ்ரூம்-250 கிராம்
- வெங்காயம்-3
- எண்ணெய்-4 தேக்கரண்டி
- நெய்- 1 தேக்கரண்டி
- கடுகு-1 தேக்கரண்டி
- சீரகம்- 1 தேக்கரண்டி
- சோம்பு-1/2 தேக்கரண்டி
- பச்சை மிளகாய்-1
- பட்டை மிளகாய் -1
- கருவேப்பிலை -சிறிதளவு
- பூண்டு- 5 பற்கள்
- இஞ்சி- 1 துண்டு
- உப்பு – தேவையான அளவு
10 பேருக்கு காளான் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள் மற்றும் அளவுகள்
மஸ்ரூம் பெப்பர் பிரை செய்முறை:
முதலில் மசாலா செய்வதற்கு 1 தேக்கரண்டி மிளகு, 1 தேக்கரண்டி சீரகம், 1/2 தேக்கரண்டி சோம்பு சேர்த்து பொடியாக அரைத்து கொள்ளவும்.

அடுத்து ஒரு கடாய் வைத்து அதில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து பொரிந்ததும், பூண்டு, இஞ்சி சிறியதாக நறுக்கியது, நறுக்கிய வெங்காயம் 3 சேர்த்து வதக்கி கொள்ளவும். வெங்காயம் சிவந்த நிறம் வந்ததும் நறுக்கிய மஸ்ரூம், நறுக்கிய குடை மிளகாய் , அரைத்து வைத்த மசாலா, தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.

பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக விடவும்.

அதற்கிடையில் சுவையை அதிகப்படுத்துவதற்கு நீங்கள் ஒரு சிறிய கடாய் வைத்து அதில் நெய் ஊற்றி சிறிதளவு கடுகு, 2 பச்சை மிளகாய், 2 காய்ந்த மிளகாய், சிறிதளவு கருவேப்பிலை சேர்த்து வதக்கி விட்டு வேகின்ற மஸ்ரூமில் சேர்த்து மிக்ஸ் செய்து விட்டு அடுப்பை அணைத்து விடவும்.
| இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal Kurippugal |














