இந்த மாதிரி மட்டன் கிரேவி செஞ்சு பாருங்க.! அப்பப்பா என்னா ருசி என்று சொல்வீர்கள்..

Advertisement

மட்டன் கிரேவி செய்வது எப்படி.?

அசைவம் என்றாலே சிக்கன், மட்டன், மீன், கருவாடு போன்றவற்றை எப்படி செய்து கொடுத்தாலும் விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் சைவ உணவுகளை ஒரே மாதிரியாக செய்து கொடுத்தால் சாப்பிடுபவர்களுக்கும், செய்பவர்களுக்கும் அலுத்து போகிவிடும். அதனால் இன்றைய பதிவில் மட்டன் கிரேவி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

மட்டன் கிரேவி செய்ய தேவையான பொருட்கள்: 

  1. மட்டன்- 1/2 கிலோ
  2. உப்பு- தேவையான அளவு
  3. மஞ்சள் தூள்- 1/2 தேக்கரண்டி
  4. கரம் மசாலா தூள்- 1/2 தேக்கரண்டி
  5. சீரக தூள் – 1 தேக்கரண்டி
  6. மல்லி தூள் – 1 தேக்கரண்டி
  7. மிளகாய் தூள்- 1 1/2 தேக்கரண்டி
  8. இஞ்சி பூண்டு பேஸ்ட்- 2 தேக்கரண்டி
  9. வெங்காயம் –3
  10. தக்காளி –2
  11. கொத்தமல்லி தழை- சிறிதளவு

மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி எந்த பிரியாணியாக இருந்தாலும் இது தாங்க ஏத்த சைடிஸ்

மட்டன் கிரேவி செய்வது எப்படி.?

மட்டன் கிரேவி செய்வது எப்படி

முதலில் 1/ 2 கிலோ மட்டன், உப்பு, மஞ்சள் தூள், தண்ணீர் ஊற்றி வேக வைத்து கொள்ளவும்.

மட்டன் கிரேவி செய்வது எப்படி

அடுத்து கிரேவி செய்வதற்கு அடுப்பில் பாத்திரம் வைத்து 3 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி, 1 பட்டை, 2 கிராம்பு, 2 ஏலக்காய், 1 தேக்கரண்டி சீரகம் சேர்த்து கலந்து கொள்ளவும். இதனுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

மட்டன் கிரேவி செய்வது எப்படி

வெங்காயம் பொன்னிறம் வந்த பிறகு, இஞ்சி பூண்டு பேஸ்ட், 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள், 1 தேக்கரண்டி கரம் மசாலா, 2 தேக்கரண்டி சீரக தூள், 1 தேக்கரண்டி மல்லி தூள், 1 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள் சேர்த்து வதக்க வேண்டும். பின் இதில் நறுக்கி வைத்த 2 தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்.

மட்டன் கிரேவி செய்வது எப்படி

தக்காளி சுருங்கிய பதம் வந்த பிறகு வேக வைத்த மட்டன், மட்டன் வேக வைத்த தண்ணீரையும் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். எண்ணெய் பிரிந்து கிரேவி கொஞ்சமாக வந்த பிறகு அடுப்பை அணைத்து விடவும்.

சிக்கன் எடுத்தால் ஒரு முறை இப்படி செஞ்சி பாருங்கள்..! 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil

 

Advertisement