பக்ரீத் ஸ்பெஷல் மட்டன் கபாப் செய்து பாருங்க..

Advertisement

மட்டன் கபாப் செய்வது எப்படி.?

பண்டிகை என்றாலே ஸ்பெஷல் தான். அந்த வகையில் ஒவ்வொரு பண்டிகையும் ஒவ்வொரு விதமாக கொண்டாடுவோம். அதில் இந்துக்களுக்கு ஒரு பண்டிகையாகவும், கிறிஸ்துவர்களுக்கு ஒரு பண்டிகையாகவும், இஸ்லாமியர்களுக்கு ஒரு பண்டிகையாகவும் இருக்கிறது. நாம் அனைவரும் ஒவ்வொரு பண்டிகை அன்றும் ஏதோ ஒரு ஸ்பெஷல் உணவினை செய்து சாப்பிடுவோம். அந்த வகையில் இந்துக்கள்  தீபாவளி என்றால் இனிப்பு மற்றும் காரமான பலகாரம், பொங்கல் என்றால் சர்க்கரை பொங்கல் மற்றும் வெண் பொங்கல் என இதுமாதிரி செய்து சாப்பிடுவோம். அதுவே இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகைக்கு பல உணவு வகைகள் இருக்கிறது. அதில் ஒன்றான மட்டன் கபாப் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

மட்டன் கபாப் செய்ய தேவையான பொருட்கள்:

 • மட்டன்-700 கிராம்
 • வெங்காயம்-2
 • சீரக தூள்- 1 தேக்கரண்டி
 • மிளகாய் தூள்- 3 தேக்கரண்டி
 • மல்லி தூள்- 2 தேக்கரண்டி
 • கரம் மசாலா தூள்- 1 தேக்கரண்டி
 • இஞ்சி பூண்டு பேஸ்ட்- 2
 • கொத்தமல்லி- சிறிதளவு
 • டொமட்டோ சாஸ்- 1 தேக்கரண்டி
 • எண்ணெய்- 1/2 லிட்டர்
 • கடலை மாவு -1 தேக்கரண்டி
 • உப்பு- தேவையான அளவு

மட்டன் கபாப் செய்முறை:

முதலில் எலும்பு இல்லாமல் 700 கிராம் மட்டனை சிறியதாக நறுக்கி எடுத்து கொள்ளவும். பிறகு நறுக்கி வைத்த மட்டனை கவர் சேர்த்து சுருட்டி வைத்து 9 அல்லது 10 மணி நேரம் அப்படியே வைக்கவும்.

பக்ரீத் ஸ்பெஷல் செட்டிநாடு மட்டன் பொரிச்ச கறி

 மட்டன் கபாப் செய்வது எப்படி

9 மணி எல்லாம் கழித்து மட்டனை சிறியதாக துருவி கொள்ளவும். அதனுடன் 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள், 1/2 தேக்கரண்டி மல்லி தூள், 1 தேக்கரண்டி மிளகாய் தூள், 1 தேக்கரண்டி சீரக தூள், 1/2 தேக்கரண்டி கரம் மசாலா தூள், தேவையான அளவு உப்பு , இஞ்சி, பூண்டு பேஸ்ட் 1 தேக்கரண்டி, வெங்காயம் சிறியதாக நறுக்கியது, கொத்தமல்லி சிறியதாக நறுக்கியது கடலை மாவு 1 தேக்கரண்டி சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும்.

 

mutton kabab

இதனை ஒரு ஸ்டிக் பயன்படுத்தி அதில் சொருகி விடவும்.

அடுத்து ஒரு பவுலில் மிளகாய் தூள் 1/2 தேக்கரண்டி, சீரக தூள் 1/2 தேக்கரண்டி 2 தேக்கரண்டி ஆயில், 1 தேக்கரண்டி தக்காளி சாஸ் சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும்.

அடுத்ததாக கடாயில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கொள்ளவும். எண்ணெய் சூடானதும் செய்து வைத்துள்ள ஸ்டிக் மட்டனை சேர்த்து பொரித்து கொள்ளவும். இரண்டு புறமும் சிவந்த நிறம் வந்ததும் செய்து வைத்துள்ள சாஸை மேலே தடவ வேண்டும். அவ்ளோ தாங்க மட்டன் கபாப் ரெடி.!

 உங்களுக்கு இது போன்ற முக்கிய தகவல்கள், அழகு குறிப்புகள், ஆன்மீக தகவல்கள்,சமையல் குறிப்புகள் போன்றவைற்றை தெரிந்துகொள்ள பொதுநலம் வலைத்தளத்தை பின்தொடருங்கள்.

 

அப்பப்பா நாவூறும் மஷ்ரூம் பெப்பர் ஃப்ரை இப்படி செஞ்சு பாருங்க..

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal Kurippugal

 

Advertisement