மட்டன் கோலா உருண்டை
அசைவம் என்றால் யாருக்காவது பிடிக்காம இருக்குமா.! அதிலும் மட்டனில் செய்த உணவு என்னவாக இருந்தாலும் அதனை விரும்பி சாப்பிடுவோம். மட்டனில் பிரியாணி, கிரேவி, குழம்பு, சுக்கா, வறுவல் போன்றவற்றை செய்து சாப்பிடுவோம். இது போல் ஒரே மாதிரியான உணவை சாப்பிட்டால் அலுத்து போகிடும். அதனால் இந்த பதிவில் மட்டனில் கோலா உருண்டை செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ள போகின்றோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
மட்டன் கோலா உருண்டை செய்ய தேவையான பொருட்கள்:
- மட்டன்-1/4 கிலோ
- மிளகாய் தூள்- 1 தேக்கரண்டி
- மஞ்சள் தூள்- சிறிதளவு
- பெருஞ்சீரகம்- 1 தேக்கரண்டி
- பட்டை- 1
- கிராம்பு –1
- ஏலக்காய்-1
- பச்சை மிளகாய்- 1
- இஞ்சி- 1 துண்டு
- பூண்டு-2 பல்
- எண்ணெய்- தேவையான அளவு
மட்டன் கோலா உருண்டை செய்முறை:
முதலில் ஒரு மசாலா ரெடி செய்வோம். அதற்கு ஒரு மிக்சியில் 1 தேக்கரண்டி பெருஞ்சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து பவுடராக அரைத்து கொள்ளவும், இதனுடன் 1 துண்டு இஞ்சி, 1 பல் பூண்டு, 1 பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து கொள்ளவும். மசாலா ரெடி.
அடுத்து அடுப்பில் கடாய் வைத்து அதில் 1 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி 1/4 கிலோ கொத்து கறியை சேர்க்க வேண்டும், அதில் காரத்திற்கேற்ப மிளகாய் தூள், சிறிதளவு மஞ்சள் தூள், அரைத்து வைத்த மசாலா, தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸ் செய்து 10 நிமிடம் வேக வைத்து கொள்ளவும்.
வாசனை ஆள இழுக்குற அளவிற்கு சுவையான செட்டிநாடு மட்டன் வறுவல் செய்யலாம் வாங்க..!
பிறகு இதனை ஆற வைத்து மிக்சியில் சேர்த்து அரைத்து ஒரு பவுலில் சேர்த்து கொள்ளவும். இதனுடன் நறுக்கிய வெங்காயம், சிறிதளவு பச்சை மிளகாய், சிறிதளவு பொட்டு கடலை மாவு சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும். இதனை உருண்டையாக உருட்டி கொள்ளவும்.
அடுப்பில் கடாய் வைத்து பொரிகின்ற அளவிற்கு எண்ணெய் ஊற்றி கொள்ளவும். எண்ணெய் சூடானதும் உருட்டி வைத்த உருண்டைகளை சேர்க்கவும். உருண்டையானது சிவந்த நிறம் வந்ததும் உருண்டைகளை எடுத்து விடவும்.
இந்த மாதிரி மட்டன் கிரேவி செஞ்சு பாருங்க.! அப்பப்பா என்னா ருசி என்று சொல்வீர்கள்..
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal Kurippugal |