மட்டனில் கிரேவி செய்து சாப்பிட்டு இருப்பீர்கள்.! ஆனால் இந்த மாதிரி குருமா செய்து சாப்பிட்டு இருக்கிறீர்களா..?

Advertisement

மட்டன் குருமா செய்வது எப்படி.?

அசைவம் என்றால் சொல்லவா வேணும், அதனின் ருசியே தனியாக தான் இருக்கும். மட்டன் கிரேவி, மட்டன் குழம்பு, மட்டன் சுக்கா போன்றவை செய்து சாப்பிட்ருப்போம். ஆனால் இந்த மட்டனில்  ஒரே மாதிரியாக செய்து சாப்பிட்டால் சமைக்கிறவர்கள், சாப்பிடுபவர்கள் இரண்டு நபருக்குமே அலுத்து போகிவிடும். அதனால் தான் இந்த பதிவில் மட்டன் குர்மா செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

மட்டன் குர்மாசெய்ய தேவையான பொருட்கள்:

 1. மட்டன்- 1/4 கிலோ
 2. எண்ணெய்- 4 தேக்கரண்டி
 3. பிரிஞ்சி இலை –
 4. கிராம்பு- 3
 5. கல்பாசி- 2
 6. வெங்காயம் –2
 7. இஞ்சி பூண்டு பேஸ்ட்- 2
 8. மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
 9. மல்லி தூள்- 1 தேக்கரண்டி
 10. மஞ்சள் தூள்-1/4  தேக்கரண்டி
 11. பெருஞ்சீரக தூள்-  1 தேக்கரண்டி

மீன் குழம்பு வைத்து சாப்பிட்டுருப்பீர்கள்..ஆனால் மீன் குருமா சாப்பிட்ருக்கீர்களா..

மட்டன் குர்மா செய்முறை:

மட்டன் குர்மா செய்முறை

முதலில் அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி, பிரிஞ்சி இலை,கிராம்பு, கல்பாசி சேர்த்து வதக்கி கொள்ளவும். பிறகு இதில் நறுக்கிய வெங்காயம் 1, இஞ்சி பூண்டு பேஸ்ட், சேர்த்து வதக்கி கொள்ளவும்.

பிறகு நறுக்கிய பச்சை மிளகாய் 2, புதினா, கொத்தமல்லி ஒரு கப், நறுக்கிய தக்காளி 2, தயிர் ஒரு கப் சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும்.

மட்டன் குருமா வைப்பது எப்படி

 

ஊற வைத்த பாதாம், கசகசா சிறிதளவு சேர்த்து அரைத்து கொள்ளவும். இந்த பேஸ்ட்டையும் வதக்கின்ற பொருட்களில் சேர்க்கவும். இதனுடன் கழுவி வைத்த மட்டன், மஞ்சள் தூள் 1/4 தேக்கரண்டி, மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி, மிளகாய் தூள் 2 தேக்கரண்டி, மல்லி தூள் 1 தேக்கரண்டி, பெருஞ்சீரக தூள் 1 தேக்கரண்டி சேர்த்து வதக்கி கொள்ளவும்.

மட்டன் குருமா வைப்பது எப்படி

பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். மட்டன் வெந்து எண்ணையெல்லாம் பிரிந்த பிறகு அடுப்பை அணைத்து விடவும். அவ்ளோ தாங்க மட்டன் குர்மா தயார்.!

ஐயர் வீட்டில் செய்யும் அருமையான பூண்டு சட்னி இரண்டு இட்லி அதிகமாக உள்ள போகும்

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal Kurippugal

 

Advertisement