மட்டன் மிளகு வறுவல் இப்படி செஞ்சி பாருங்க அப்படியொரு டேஸ்ட்டா இருக்கும்..!

Advertisement

மட்டன் மிளகு வறுவல் செய்முறை – Mutton Varuval

ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. உங்களுக்கு மட்டனில் செய்யக்கூடிய அனைத்து ரெசிபியும் பிடிக்குமா? அப்படின்னா இந்த பதிவு உங்களுக்கானது தான்.. இன்று நாம் நமது பொதுநலம்.காம் வலைதளத்தில் சமையல் குறிப்பு பதிவில் மட்டன் மிளகு வறுவல் செய்வது எப்படி என்று தான் தெரிந்துகொள்ள போகிறோம். உங்களு மட்டன் மிளகு வறுவல் பிடிக்கும், ஆனால் எப்படி செய்வதென்று தெரியவில்லையா அப்படி என்றால் இந்த பதிவை முழுமையாக படித்து தெரிந்துகொள்ளுங்கள். பிறகு உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்து அசத்துங்கள்..

தேவையான பொருட்கள்:

வேகவைக்க:

 1. மட்டன் – 1/2 கிலோ
 2. மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
 3. மல்லி தூள் – 1 ஸ்பூன்
 4. மஞ்சள் தூள் – 3 சிட்டிகை
 5. உப்பு – தேவையான அளவு
 6. இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
 7. தண்ணீர் – 3/4 கப்

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
செட்டிநாடு முட்டை குழம்பு மிகவும் சுவையாக செய்யும் முறை

மசாலா தயார் செய்ய:

 1. மிளகு – ஒரு ஸ்பூன்
 2. சீரகம் – 1/2 ஸ்பூன்
 3. சோம்பு – ஒரு ஸ்பூன்
 4. பட்டை – மூன்று
 5. ஏலக்காய் –  ஒன்று
 6. கிராம்பு – ஐந்து
 7. கருவேப்பிலை – 1/2 கைப்பிடியளவு

சமையல் செய்வதற்கு:

 1. எண்ணெய் – மூன்று டேபிள் ஸ்பூன்
 2. சின்ன வெங்காயம் – 150 கிராம் பொடிதாக நறுக்கியது
 3. பொடிதாக நறுக்கிய கொத்தமல்லி சிறிதளவு

செய்முறை:Mutton Varuval

ஒரு குக்கரை எடுத்துக்கொள்ளுங்கள் அதில் 1/2 கிலோ சுத்தம் செய்த மட்டன், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், ஒரு ஸ்பூன் மல்லித்தூள், மூன்று சிட்டிகை மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது மற்றும் தேவையான அளவு உப்பு மற்றும் 3/4 கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கிளறிவிடுங்கள்.

பின்பு குக்கரை மூடி 5 அல்லது 6 விசில் விட்டு மட்டனை வேகவைக்கவும்.

பின்பு அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் ஒரு ஸ்பூன் மிளகு, அரை ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் சோம்பு, மூன்று பட்டை, ஐந்து கிராம்பு, ஒரு ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து மிதமான தீயில் அவற்றில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள் நன்கு வாசனை வரும் வரை வறுக்கவும், கவனமாக வாருங்கள் கருகிவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

ஓரளவு பொருட்கள் வறுபட்டதும் அவற்றில் அரை கையளவு கருவேப்பிலை சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும். அவ்வளவு தான் வதக்கிய பொருட்கள் அனைத்தையும் நன்கு ஆறவைத்து ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து, தண்ணீர் சேர்க்காமல் நன்கு பவுடர் போல் அரைத்துக்கொள்ளுங்கள்.

பிறகு அடுப்பில் அதே வாணலியை வைத்து மூன்று டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி நன்கு சூடுபடுத்தவும். எண்ணெய் நன்கு சூடானதும் 150 கிராம் நறுக்கிய சின்ன வெங்காயத்தை பொடிதாக அவற்றில் சேர்த்து நன்றாக வதக்கவும்.

வெங்காயம் நன்கு சிவந்து வந்த பிறகு வேகவைத்து வைத்துள்ள மட்டனை இவற்றில் சேர்த்து கிளறி உப்பு சிறிதளவு சேர்த்து கிரளிவிடுங்கள்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கறிக்குழம்பு சுவையில் உடைத்த முட்டை குழம்பு இப்படி செஞ்சு பாருங்க..!

பின்பு அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்றாக கிளறிவிடுங்கள், பின்பு வாணலியை மூடி இரண்டு நிமிடங்களுக்கு ஒரு முறை திறந்து கிளறிவிடுங்கள். இவ்வாறு பத்து நிமிடம் வரை மட்டன் மிளகு வறுவலை வேகவைக்க வேண்டும்.

10 நிமிடம் கழித்த பிறகு அடுப்பை அணைத்து பொடிதாக நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி இலையை தூவி இறக்கினால் சுவையான மட்டன் மிளகு வறுவல் தயார்.

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>  சமையல் குறிப்புகள்
Advertisement