மைசூர் மசாலா தோசை செய்வது எப்படி | How to Make Mysore Masala Dosa
தோசை என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு உணவு. இத்தகைய தோசையில் நிறைய வகைகள் இருந்தாலும் நம்முடைய வீடுகளில் வெங்காய தோசை, முட்டை தோசை, ரவா தோசை மற்றும் மசாலா தோசை என இவற்றை தான் அதிகமாக செய்வார்கள். ஆனால் இத்தகைய தோசைகளை தாண்டி மிக அதிக ருசியுடன் கூடிய தோசை ரெசிபிகளும் இருக்கிறது. நாம் தான் அவற்றை எல்லாம் ஹோட்டலில் போய் எப்படி சாப்பிடுவது என்று யோசித்து அதனை மறுத்து விடுகிறோம். அதனால் இன்று மைசூர் ஸ்பெஷல் மசாலா தோசை செய்வது எப்படி என்பதை பற்றி தான் பார்க்கப்போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Mysore Masala Dosa Ingredients:
- சீரகம்- 1 ஸ்பூன்
- உளுந்து- 1/2 ஸ்பூன்
- பொட்டுக் கடலை- 1/2 ஸ்பூன்
- கடலை பருப்பு- 1 ஸ்பூன்
- காய்ந்த மிளகாய்- 20
- பூண்டு- 120 கிராம்
- மல்லி- 1 ஸ்பூன்
- தோசை மாவு- 1 கப்
- பெருங்காய பவுடர்- சிறிதளவு
- உப்பு- தேவையான அளவு
- கறிவேப்பிலை- தேவையான அளவு
- எண்ணெய்- தேவையான அளவு
கேரட்டில் சட்னி செய்ய முடியுமா புதுசா இருக்கே ட்ரை பண்ணி பாப்பும்..
மைசூர் மசாலா தோசை செய்முறை:
முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெயினை ஊற்றி காய விடுங்கள்.
பின்பு எண்ணெய் நன்றாக காய்ந்த பிறகு அதில் எடுத்துவைத்துள்ள கடலை பருப்பு மற்றும் உளுந்தை சேர்த்து நன்றாக 5 நிமிடம் வரை வதக்கி கொள்ளுங்கள்.
5 நிமிடம் கழித்த பிறகு கடாயில் உள்ள பொருளுடன் எடுத்துவைத்துள்ள சீரகம், மல்லி, பூண்டை மற்றும் காய்ந்த மிளகாயினை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளுங்கள்.
ஒரு 10 நிமிடம் கழித்த பிறகு மீண்டும் கடாயில் உள்ள பொருளுடன் கறிவேப்பிலை, பொட்டுக்கடலை மற்றும் சிறிதளவு பெருங்காயம் தூள், உப்பு தேவையான அளவு சேர்த்து நன்றாக பொன் நிறமாக வரும் வரை வதக்கி கொண்டே இருங்கள்.
கடைசியாக வதக்கிய பொருளை ஆறவைத்து பின்பு மிக்சி ஜாரில் சேர்த்து நன்றாக பேஸ்ட் பதத்திற்கு அரைத்து விட வேண்டும். இதன் பிறகு 10 பற்கள் பூண்டினை எடுத்துக்கொண்டு அதை நன்றாக நைசாக நறுக்கி கொள்ளுங்கள்.
இப்போது ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் அதில் நைசாக நறுக்கிய பூண்டினை சேர்த்து வதக்கி பின்பு அரைத்த பேஸ்டினை சேர்த்து தாளித்து கொள்ளுங்கள். அவ்வளவு தான் மைசூர் மசாலா தயார்.
அடுத்து தோசை கல்லை அடுப்பில் வைத்து வழக்கம் போல் தோசை ஊற்றி நன்றாக வெந்த பிறகு அதன் மேலே மைசூர் மசாலாவை தேய்த்தால் போதும் மைசூர் மசாலா தோசை ரெடி.
காலை உணவுக்கு ஏற்ற சூப்பரான கொய்யா சட்னி இப்படி செஞ்சி பாருங்க
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |