கோகுலாஷ்டமி உடனடி நெய் அப்பம் செய்வது எப்படி.?

Advertisement

நெய் அப்பம் செய்வது எப்படி.?

பொதுவாக ஒவ்வொரு பண்டிகை என்றாலே என்ன பலகாரம் செய்வது என்று தான் யோசிப்பார்கள். அப்படி செய்ய கூடிய பலகாரங்களில் இரண்டே வகை தான். ஒன்று இனிப்பு, மற்றொன்று காரமாக தான் இருக்கும். நாளை கோகுலாஷ்டமி வருகிறது. என்ன பலகாரம் செய்வது என்று யோசித்து கொண்டிருப்பவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். அந்த வகையில் இன்றைய பதிவில் நெய் அப்பம் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

நெய் அப்பம் செய்ய தேவையான பொருட்கள்:

  • அரிசி மாவு- 1 1/2 கப்
  • வெல்லம்- ஒரு கப்
  • வாழைப்பழம்-
  • ஏலக்காய்- 3
  • சுக்கு பொடி- 1/ஸ்பூன்
  • உப்பு- தேவையான அளவு
  • நெய்- பொரிப்பதற்கு தேவையான அளவு

நெய் அப்பம் செய்முறை:

நெய் அப்பம் செய்வது எப்படி

முதலில் ஒரு கட்டி வெல்லத்தை நன்றாக தூளாக செய்து அதனை ஒரு பாத்திரத்தில் சேர்த்து கொள்ளவும். அதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும். இதனை குறைவான தீயிலே வைத்து கொதிக்க விடவும். பாகு பதத்திற்கு வர வேண்டிய அவசியமில்லை, வெல்லம் கரைந்தாலே போதுமானது.

அடுத்து வெல்லம் கரைந்ததும் இதனை வடிக்கட் கொள்ளவும். அதனுடன் ஏலக்காய், சுக்கு இரண்டையும் தனித்தனியாக  இடித்து சேர்த்து கொள்ளவும்.

பிறகு மிக்சி ஜாரை எடுத்து அதில் வாழைப்பழம் 4 சேர்த்து கொள்ளவும். பின் இதனுடன் செய்து வைத்துள்ள வெல்ல கரைசல், பச்சரிசி மாவு 1 1/2 கப் சேர்த்து அரைத்து தனியாக பாத்திரத்தில் சேர்த்து கொள்ளவும்.

நெய் அப்பம் செய்வது எப்படி

இந்த மாவனது தோசை மாவு பதத்திற்கு இருக்க வேண்டும். ரொம்ப கெட்டியாக இருந்தால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும். இதனை 3 மணி நேரத்திற்கு ஊற விடவும்.

3 மணி நேரம் கழித்து ஆப்ப சோடாவை தண்ணீரில் கலந்து மாவுடன் கலந்து கொள்ளவும்.

நெய் அப்பம் செய்வது எப்படி

பணியார சட்டியை எடுத்து குழியில் நெய் சேர்த்து கொள்ளவும். பிறகு செய்து வைத்துள்ள மாவை ஊற்றி கொள்ளவும். இரண்டு பக்கமும் வேக விட்டு எடுத்து கொள்ளவும், முக்கியமாக அடுப்பை குறைவான தீயிலே வைத்துவேக விடவும்.

கசப்பே தெரியாமல் சுண்டைக்காய் வறுவல் எப்படி செய்யணுமுன்னு தெரியுமா.?

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil

 

Advertisement