மொறு மொறுன்னு 10 நிமிடத்தில் சுவையான ஓமப்பொடி செய்வது எப்படி..?

Omapodi Recipe in Tamil

Omapodi Recipe in Tamil

ஸ்னாக்ஸ் வகைகளில் மிகவும் பிரபலமானது ஓமப்பொடி. இது இந்தியாவில் அதிகமாக மாலை நேரங்களில் டீயுடன் சாப்பிட கூடிய சிற்றுண்டியாக இருக்கிறது. ஓமப்பொடி மத்திய பிரதேசங்களில் தோன்றி மெல்ல மெல்ல இந்தியாவிற்கு வந்தது. ஓமப்பொடியின் ஸ்பெஷல் என்னவென்றால் இதனை வீட்டிலே செய்து சாப்பிடலாம். இதனை வாங்க கடைக்கு எங்கும் செல்ல வேண்டிய தேவையில்லை. அதுமட்டுமில்லாமல் இதனை ஒரு முறை தயார் செய்து 3 வாரங்களுக்கு பயன்படுத்தலாம். பிறகு, குழந்தைகள் ஸ்னாக்ஸ் கேட்கும் போது இதனை எடுத்து கொடுக்கலாம். ஓகே வாருங்கள் மொறு மொறுன்னு சுவையான ஓமப்பொடி செய்வது எப்படி என்பதை இப்பதிவில் பின்வருமாறு படித்து தெரிந்துகொள்ளலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

How to Make Omapodi in Tamil:

ஓமப்பொடி செய்வதற்கு தேவையான பொருட்கள்:

  • ஓமம்- 1 ஸ்பூன்
  • கடலை மாவு- 100 கிராம்
  • அரிசி மாவு- 50 கிராம்
  • மஞ்சள் தூள்- 1/4 ஸ்பூன்
  • பெருங்காயத்தூள்- 1 சிட்டிகை
  • வெண்ணெய்- 1 ஸ்பூன்
  • உப்பு- தேவையான அளவு
  • கறிவேப்பிலை- 2 கொத்து

ஓமப்பொடி செய்யும் முறை:

ஸ்டேப் -1

முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் ஓமத்தை சேர்த்து அரைத்து கொள்ளுங்கள். பிறகு இதனுடன் 1/2 கப் தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டி எடுத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப் -2

அடுத்து, ஒரு பாத்திரத்தை எடுத்து கொள்ளுங்கள். அதில் கடலை மாவு, அரிசி மாவு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், வெண்ணெய் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து கொள்ளுங்கள்.

5 நிமிடத்தில் மொறுமொறுனு ஸ்னாக்ஸ் செஞ்சி பாருங்க..

ஸ்டேப் -3

இப்போது, சேர்த்துள்ள பொருட்களை எல்லாம் நன்றாக கலந்து கொள்ளுங்கள். பிறகு, இதில் வடிகட்டி வைத்த ஓமப்பொடி தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து பிசைந்து கொள்ளுங்கள். அதாவது முறுக்கு மாவு பதத்திற்கு பிசைந்து எடுத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப் -4

தயார் செய்து வைத்துள்ள மாவினை முறுக்கு அச்சில் அதாவது சிரிய துளை உடைய அச்சில் வைத்து கொள்ளுங்கள். இப்போது அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து கொள்ளுங்கள்.

ஸ்டேப் -5 

 omapodi preparation in tamil

எண்ணெய் மிதமாக சூடான பதத்திற்கு வந்ததும் அதில் அச்சில் உள்ள மாவினை வட்டமாக பிழிந்து விடுங்கள். மாவினை எண்ணெய்யில் பிழியும் போது கவனமாக இருக்க வேண்டும்.

ஸ்டேப் -6

 how to make omapodi in tamil

பிறகு இவை நன்றாக சிவந்ததும் அதனை திருப்பி போட்டு ஒரு கிண்ணத்தில் எடுத்து கொள்ளுங்கள். அடுத்து அதே எண்ணெயில் கருவேப்பிலை சேர்த்து பொரிய விட்டு எடுத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப் -7

 ஓமப்பொடி செய்வது எப்படி

இப்போது தயார் செய்து வைத்துள்ள ஓமப்பொடியை மிதமான சூட்டில் கையால் உடைத்து கொள்ளுங்கள். பிறகு இதில் பொறித்த கறிவேப்பிலை சேர்த்து கலந்து விட்டால் சுவையான ஓமப்பொடி ரெடி..!

 ஓமப்பொடி செய்முறை

சுவையான நீர் உருண்டை செய்வது எப்படி | Neer Urundai Recipe in Tamil

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil