Pachai Milagai Oorugai Seivathu Eppadi
நமது இந்திய பாரம்பரிய உணவுகளை பொறுத்த வரையில் பச்சைமிளகைக்கென்று ஒரு தனி இடமே உள்ளது. அதாவது இதனின் கார சுவையான உணவிற்கு தேவையான காரத்தை அளிக்கின்றது. அதனால் இதனை பலவகையான உணவுகளில் முக்கியமான,தாளிக்க மற்றும் சட்டினி அரைக்க என பலவகையில் பயன்படுத்துவார்கள். அப்படி பயன்படுத்தி வரும் பச்சை மிளகாயை பார்க்கும் பொழுது நாம் அனைவரின் மனத்திலேயும் எழும் ஒரு பொதுவான கேள்வி என்றால் அது நாம் இந்த பச்சை மிளகாயை ஏதாவது ஒரு புதுமையான முறையில் சாப்பிட்டால் என்ன என்பது தான். இப்படிப்பட்ட கேள்வி எழுந்தவர்களுக்கு இன்றைய பதிவு மிக மிக பயனுள்ளதாக அமையும். ஆம் நண்பர்களே இன்றைய பதிவில் பச்சை மிளகாய் ஊறுகாய் செய்வது எப்படி என்பதை பற்றி விரிவாக காணலாம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Chilli Pickle Recipe in Tamil:
உணவில் காரா சுவைக்காக பயன்படுத்தப்படும் பச்சை மிளகாயை பயன்படுத்தி ஊறுகாய் செய்வது எப்படி என்பதை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க..
முதலில் இந்த ஊறுகாய் செய்வதற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.
- பச்சை மிளகாய் – 1 கிலோ
- புளி – 200 கிராம்
- மஞ்சள்தூள் – 1 டேபிள் ஸ்பூன்
- வெந்தயம் – 2 டேபிள் ஸ்பூன்
- கடுகு – 3 டேபிள் ஸ்பூன்
- பெருங்காயத்தூள் – 1 டேபிள் ஸ்பூன்
- நல்லெண்ணெய் – 200 மி.லி
- உப்பு – தேவையான அளவு
- தண்ணீர் – தேவையான அளவு
- கண்ணாடி பாட்டில் – 1
முருங்கைக்காயை ஒரே மாதிரி சாப்பிட்டு சலித்து போய்ட்டா அப்போ இந்த ரெசிபியை ட்ரை பண்ணுங்க
செய்முறை:
ஸ்டேப் – 1
முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 1 கிலோ பச்சை மிளகாயை தேவையான அளவு தண்ணீரை ஊற்றி நன்கு சுத்தம் செய்துவிட்டு நன்கு உலரவைத்து கொள்ளுங்கள். பின்னர் அதனின் நடுப்பகுதியில் லேசாக கீரி வைத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 2
பிறகு நாம் எடுத்து வைத்துள்ள 200 கிராம் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி ஊறவைத்து நன்கு கரைத்து எடுத்து எடுத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 3
பிறகு அடுப்பில் ஒரு காடாயை வைத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் வெந்தயம் மற்றும் 3 டேபிள் ஸ்பூன் கடுகு ஆகியவற்றை லேசாக வறுத்து ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நன்கு பொடியாக அரைத்து கொள்ளுங்கள்.
கேரட் பிடிக்காதவங்க கூட திரும்ப திரும்ப கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க இப்படி செஞ்சி கொடுத்தா
ஸ்டேப் – 4
அடுத்து அடுப்பில் ஒரு காடாயை வைத்து அதில் 200 மி.லி நல்லெண்ணெய்யை சேர்த்து அதனுடன் நாம் கிரி வைத்துள்ள 1 கிலோ பச்சை மிளகாயையும் சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 5
அது நன்கு வதங்கிய உடன் அதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் நாம் கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை சேர்த்து நன்கு கொதிக்கவிடுங்கள்.
ஸ்டேப் – 6
அது நன்கு கொதித்த உடன் அதில் 1 டேபிள் ஸ்பூன் பெருங்காயத்தூள் மற்றும் நாம் முன்னரே அரைத்து வைத்துள்ள வெந்தயம், கடுகு பொடியையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். சிறிதுநேரம் கொதித்தவுடன் ஒரு கண்ணாடி பாட்டிலில் எடுத்து சேமித்து வைத்து கொள்ளுங்கள்.
Non Veg-யே மிஞ்சிடும் சுவையில் Veg Chicken நக்கெட்ஸ் செய்வது எப்படி
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |