Green lentil Dosa in Tamil
பெரும்பாலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவாக தோசை உள்ளது. ஆனால் விரும்பி சாப்பிடும் உணவாக இருந்தாலும் அவர்களுக்கு நாளடைவில் தோசையை பிடிக்காமல் போய்விடும். ஒரு சிலர் வீட்டில் தினமும் தோசை மாவை பயன்படுத்தி தோசையை ஊற்றி கொடுப்பது வழக்கமாகி விட்டது. அதற்கு ஒரே மாதிரியான தோசை ஊற்றி கொடுக்காமல் புதியதாக ஒரு தோசையை இந்த பதிவில் பார்த்து தெரிந்து கொள்வோம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
தேவையான பொருட்கள் :
- பச்சைப்பயறு – 1 கப்
- பச்சை அரிசி –2 டேபிள் ஸ்பூன்
- சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்
- இஞ்சி – சிறிதளவு
- பச்சை மிளகாய் – 3
- கொத்தமல்லி – சிறிதளவு
- உப்பு – தேவையான அளவு
- பாசிப்பயறு தண்ணீர் – சிறிதளவு
- கேரட் – நறுக்கியது
- வெங்காயம் – நறுக்கியது
- கொத்தமல்லி – சிறிதளவு
பச்சைப்பயறு தோசை செய்முறை :
ஸ்டெப் : 1
முதலில் பவுலை எடுத்து கொள்ளவும். அதில் 1 கப் பச்சை பயறு மற்றும் பச்சை அரிசி 2 டேபிள் ஸ்பூன் சேர்த்து தண்ணீர் கொண்டு அலசி கொள்ளவும். அதன் பிறகு பாசிப்பயிற்றை தண்ணீரை ஊற்றி 8 மணி நேரம் ஊற வைக்கவும். இதை ஒரு தட்டு கொண்டு மூடவும்.
தோசை ஊற்றினால் இது மாதிரி செய்து சாப்பிடுங்கள்..!
ஸ்டெப் :2
ஒரு மிக்சியில் ஊற வைத்த பச்சைப் பயறு மற்றும் பச்சை அரிசி அதனுடன் சீரகம், இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, மற்றும் உப்பு போன்ற பொருட்களை சேர்த்து கடைசியாக பாசிப்பயறு ஊறவைத்த தண்ணீரை ஊற்றி நன்றாக அரைக்கவும். அந்த மாவானது தோசை மாவு பதம் வந்தவுடன் அதனை ஒரு பவுலுக்கு மாற்றவும்.
ஸ்டெப் : 3
தோசை தவாவை அடுப்பில் வைத்து கொள்ள வேண்டும். பிறகு தோசை வடிவில் மாவினை தவாவில் ஊற்றவும். தோசையின் மேல் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, அதனுடன் நறுக்கிய கேரட், வெங்காயம் மற்றும் கொத்தமல்லியை போட்டு எடுத்தால் சுவையான மொறு மொறு பச்சைப் பயறு தோசை ரெடி.
சிவப்பு மிளகாய் சட்னி :
தேவையான பொருட்கள் :
- சிவப்பு மிளகாய் – 20
- நல்லெண்ணெய் – தேவையான அளவு
- மல்லி – 2 டேபிள் ஸ்பூன்
- பூண்டு – 15
- கட்டி பெருங்காயம் – 1
- கல் உப்பு – தேவையான அளவு
- கருவேப்பிலை – 1 கைப்பிடி
- ஊறவைத்த – புளி கரைசல்
சிவப்பு மிளகாய் சட்னி செய்முறை :
ஸ்டெப் : 1
முதலில் ஒரு கடாய் எடுத்து கொள்ளவும். கடாயில் நல்லெண்ணெயை சேர்க்கவும். பிறகு கட்டி பெருங்காயம், மல்லி விதைகள், சிவப்பு மிளகாய் போட்டு வதக்கவும். அதன் பின் ஒரு மிக்சியை எடுத்து கொண்டு, அதில் வதக்கி வைத்த பொருட்கள் மற்றும் அதனுடன் உப்பு, புளி கரைசல் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்றாக அரைக்கவும். அந்த சட்னியை ஒரு பவுலில் மாற்றவும்.
தோசை முறுவலாக வரவேண்டுமா? அப்போ இந்தாங்க டிப்ஸ்..!
ஸ்டெப் : 2
அடுத்தது ஒரு கடாய் வைத்து நல்லெண்ணெயை சேர்க்கவும். அதனுடன் கடுகு சேர்த்து, அரைத்து வைத்த சட்னியை ஊற்றி, அதன் சட்னியின் பச்சை வாசனை போகும் வரை நன்றாக கொதிக்க வைக்கவும். சட்னி நன்றாக எண்ணெய் பதம் வந்த பிறகு ஒரு பவுலுக்கு மாற்றினால் சிவப்பு மிளகாய் சட்னி ரெடி.
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |