வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

பாலக் பன்னீர் தோசை செய்வது எப்படி..?

Updated On: August 11, 2023 8:52 AM
Follow Us:
Palak Paneer Dosa Recipe in Tamil
---Advertisement---
Advertisement

Palak Paneer Dosa Recipe in Tamil

மனிதனாக பிறந்த அனைவரும் இந்த உலகில் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்றால் அதற்கு அடிப்படையாக தேவைப்படுவது உணவு, உடை, உறையுள்ள இதில் முதலாவதாக உள்ள உணவு இல்லை என்றால் மனிதனின் மொத்த ஆற்றலும் இல்லாமல் போகிவிடும். அதனால் அனைவருமே தங்களது உணவினை தவறவிடாமல் சாப்பிட வேண்டும் மற்றும் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும். அதிலும் குறிப்பாக குழந்தைகள் தங்களுக்கு பிடித்த உணவினை மட்டும் தான் சாப்பிடுவார்கள். ஆனால் அதில் ஆரோக்கியம் நிறைந்திருக்குமா என்றால் இல்லை என்பதே உண்மை. அதாவது ஒரு சில குழந்தைகளுக்கு தோசை என்றால் மிக மிக பிடிக்கும். ஆனால் அது அவ்வளவாக நமது உடலுக்கு நன்மையை அளிப்பதில்லை. அதனால் உங்கள் குழந்தைகளுக்கு பிடித்த உணவான தோசையே ஆரோக்கியமாக மாற்றி அவர்களுக்கு அளியுங்கள். அது எப்படி என்று நீங்கள் சிந்தனை செய்வது புரிகின்றது. அதனால் தான் இன்றைய பதிவில் நமது உடலுக்கு மிகவும் வலிமை சேர்க்கும் பாலக் பன்னீர் தோசை செய்வது எப்படி என்பதை அறிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Palak Paneer Masala Dosa Recipe in Tamil:

Palak Paneer Masala Dosa Recipe in Tamil

மிகவும் எளிமையான மற்றும் மிகவும் சுவையான பாலக் பன்னீர் தோசை செய்வது எப்படி என்பதை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க.

முதலில் இந்த ரெசிபிக்கு தேவையான பொருட்களை பார்க்கலாம் வாங்க

  1. பாலக் கீரை – 1 கட்டு 
  2. பச்சை மிளகாய் -1
  3. பூண்டு – 3 பல்
  4. சீரகம் – ½ தேக்கரண்டி
  5. தோசை மாவு – 3 கப்
  6. நெய் – 2 டீஸ்பூன் 
  7. துருவிய பன்னீர் – 100 கிராம் 
  8. தண்ணீர் – தேவையான அளவு
  9. உப்பு – ½ தேக்கரண்டி

பீர்க்கங்காய் துவையலை இப்படி ஒரு முறை செய்து சுவைத்து பாருங்க நாக்கிலிருந்து சுவை நீங்கவே நீங்காது

செய்முறை:

ஸ்டேப் – 1

Palak dosa recipe in tamil

முதலில் நாம் வாங்கி வைத்துள்ள 1 கட்டு பாலக் கீரையை நன்கு சுத்தம் செய்து கொள்ளுங்கள். பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி அதில் தேவையான அளவு உப்பினை சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள்.

ஸ்டேப் – 2

பிறகு அதில் நாம் சுத்தம் செய்து வைத்துள்ள 1 கட்டு பாலக் கீரையை சேர்த்து நன்கு வேகவைத்து எடுத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப் – 3

அடுத்து ஒரு மிக்சி ஜாரை எடுத்து அதில் நாம் வேகவைத்து எடுத்துவைத்துள்ள கீரை, 3 பல் பூண்டு, 1 பச்சை மிளகாய் மற்றும் ½ தேக்கரண்டி சீரகம் ஆகியவற்றை சேர்த்து நன்கு பசைபோல் அரைத்து கொள்ளுங்கள்.

ஜவ்வரிசி பாயசம் செய்வது எப்படி

ஸ்டேப் – 4

இப்பொழுது நாம் அரைத்து வைத்துள்ள பசையை 3 கப் தோசை மாவில் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

ஸ்டேப் – 5

பிறகு அடுப்பில் ஒரு தோசை கல்லை வைத்து அதில்  நாம் தயாரித்து வைத்துள்ள மாவினை வைத்து தோசையை ஊற்றி கொள்ளுங்கள். பிறகு அதன் மீது 2 டீஸ்பூன் நெய் மற்றும் ஏதாவது சட்டினியை தடவி கொள்ளுங்கள்.

பின்னர் அதில் நாம் எடுத்து வைத்துள்ள 100 கிராம் துருவிய பன்னீரை சேர்த்து எடுத்தீர்கள் என்றால் நமது சுவையான மற்றும் ஆரோக்கியமான பாலக் பன்னீர் தோசை தயாராகிவிடும்.

வாங்க சுவைக்கலாம்.. நீங்களும் இந்த பாலக் பன்னீர் தோசையை உங்கள் வீட்டில் செய்து சுவைத்து பாருங்கள்.

செய்யும் பொழுதே சுவைக்க தூண்டும் பீட்ரூட் கட்லெட் செய்வது எப்படி

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

easy rava laddu recipe in tamil

விநாயகர் சதுர்த்திக்கு இந்த லட்டு செஞ்சு பாருங்க.. அப்படி ஒரு சுவை..

Ellu Kozhukattai Recipe in Tamil

இந்த விநாயகர் சதுர்த்திக்கு மிகவும் ருசியான எள்ளு கொழுக்கட்டையை செய்து சுவைத்து பாருங்க..!

விநாயகர் சதுர்த்திக்கு இந்த போளியை செய்து பாருங்கள்.. சூப்பரா இருக்கும்..

vinayagar chaturthi special food in tamil

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் கொழுக்கட்டை | Vinayagar Chaturthi Special Food in Tamil..!

vinayagar sathurthi special recipes nippattu in tamil

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் மொறு மொறு தட்டை அருமையான சுவையுடன்….

Shrikhand Sweet Recipe in Tamil

கோகுலாஷ்டமி ஸ்பெஷல் ஸ்ரீகந்த் இனிப்பு செய்வது எப்படி தெரியுமா..?

கண்ணனுக்கு பிடித்த வெண்ணெயுடன்…கிருஷ்ண ஜெயந்தி Special பாதாம் கீர்

கேரளாவின் ஓணம் ஸ்பெஷல் காரம் மற்றும் புளிப்பு சுவைக்கொண்ட இஞ்சிப்புளி

aadi 18 special food in tamil

ஆடிப்பெருக்கு ஸ்பெஷல் காப்பரிசியை இப்படி செஞ்சு பாருங்க..