சுவையான பாலக் பன்னீர் புலாவ் செய்வது எப்படி ?

Advertisement

பாலக் பன்னீர் புலாவ்

பொதுவாக அனைவருக்குமே தினம் ஏதாவது ஒரு புது வகையான உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் அதற்கான நேரம் நமக்கு இருக்காது. காலை பொழுதில் வேலைக்கு அவசரமாக கிளம்புவதால் எளிமையாக செய்யக்கூடிய உணவுகளை தேர்ந்தெடுப்போம். ஆனால் இரவு நாம் அனைவருமே வேலைக்கு மற்றும் பள்ளிகளுக்கு சென்று திருப்பிய பின்னர் இரவு நேர உணவினை மிகவும் சுவையானதாகவும் ஆரோக்கியமானதாகவும் மாற்ற வேண்டும் என்ற ஆசை நாம் அனைவருக்குமே அதிகமாக இருக்கும். அந்த இரவு உணவை குடும்பத்துடன் ஒன்றாக உண்ண பெரும்பாலானோருக்கு வாய்ப்பு கிடைக்கும்.

அப்படி அனைவரும் ஒன்றாக உண்ணும் போது சுவையானதாகவும் அனைவருக்கும் பிடித்த புதுவகை உணவை தயாரிக்க எண்ணுவோம். அப்படி ஒரு சுவையான உணவுதான் பாலக் பன்னீர் புலாவ். இன்றைய பதிவில் மிகவும் எளிமையான மற்றும் சுவையான பாலக் பன்னீர் புலாவ் உணவினை எவ்வாறு செய்வது எப்படி என்பதை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள முறையில் நீங்களும் உங்கள் வீட்டில் இந்த எளிமையான இரவு உணவினை செய்து சுவைத்து பாருங்கள்..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

பாலக் பன்னீர் புலாவ் செய்ய தேவையான பொருட்கள்:

 

palak paneer pulao recipe in tamil

பாஸ்மதி அரிசி – 2 கப்
பாலக் கீரை – 250 கிராம்
பச்சை மிளகாய் – 3
பனீர் – 200 கிராம்
புதினா – ½ கப்
வெங்காயம் – 5
தக்காளி – 2
இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
மல்லி தூள் – 1 தேக்கரண்டி
சீரகம் தூள் – ½ டீஸ்பூன்
மஞ்சள் தூள் – ¼ தேக்கரண்டி
எண்ணெய் -தேவையான அளவு
நெய் – 2 டீஸ்பூன்
தண்ணீர் – தேவையான அளவு
கொத்தமல்லி இலை – தேவையான அளவு (நறுக்கியது)
எலுமிச்சை சாறு – ½ தேக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப

பாலக் பன்னீர் புலாவ் செய்முறை:

முதலில் அரிசியை 15 நிமிடம் வரை ஊறவைத்து தண்ணீரை வடித்து வைத்துக்கொள்ளவும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் பசலைக்கீரையை வெந்நீரில் போட்டு அதனுடன் சிறிது  உப்பு சேர்த்து பின்னர் தண்ணீரை வடிகட்டி கொள்ளவும்.

பிறகு மிக்சியில் சுத்தம் செய்து வைத்துள்ள கீரை, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும்.

பாலக் பன்னீர் புலாவ் செய்முறை

அடுத்ததாக ஒரு கடாயில் எண்ணெய் மற்றும் நெய்யை சூடாக்கி, நறுக்கிய வைத்துள்ள வெங்காயம் சேர்த்து, பொன்னிறமாக மாறும் வரை வதக்கி கொள்ளவும்.

பின்னர் அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, தக்காளி சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

பாலக் பன்னீர் புலாவ் செய்ய தேவையான பொருட்கள்

பின்னர் அதனுடன் பனீர் சேர்த்து, பனீர் பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும்.

பாலக் பன்னீர் புலாவ்

பின்னர் அதனுடன் அரைத்து வைத்துள்ள கீரை சேர்த்து நன்றாக கிளறவும். பின்னர் அவற்றுடன் தேவையான மசாலாப்பொருட்களை சேர்த்து நன்றாக வதக்கவும்.

பாலக் பன்னீர் புலாவ்

பின்னர் ஊற வைத்துள்ள அரிசி சேர்த்து போதுமான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து 15 முதல் 20 நிமிடம் வேக வைக்கவும்.

பாலக் பன்னீர் புலாவ் செய்ய தேவையான பொருட்கள்

அரிசி வெந்ததும் கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கினால் சுவையான பாலக் பன்னீர் புலாவ் ரெடி.

பாலக் பன்னீர் புலாவ்

வாயில் வைத்ததும் வழுக்கி ஓடும் மிகவும் சுவையான பாதாம் அல்வா இப்படி செய்யுங்க

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்!!!

 

Advertisement