பள்ளிபாளையம் சிக்கன் செய்வது எப்படி? – Pallipalayam chicken recipe in tamil
நீங்கள் ஒரு சிக்கன் பிரியரா? சிக்கனில் என்ன உணவு செய்து கொடுத்தாலும் அதனை விரும்பி சாப்பிடுவீர்களா? அப்படி என்றால் இந்த பதிவு உங்களுக்கானது. இன்றிய பதிவில் முற்றிலும் வித்தியாசமாக பள்ளிபாளையம் சிக்கன் கிரேவி செய்வது எப்படி? என்பது குறித்த தகவலை பற்றி தான் நான் உங்களுடன் பகிர்ந்துள்ளேன். இந்த சிக்கன் செய்ய மசாலா எதுவும் தேவைப்படாது. மிக எளிமையாக நமது வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு செய்யலாம். சரி வாங்க இந்த பள்ளிபாளையம் சிக்கன் கிரேவி செய்வது எப்படி என்று இப்பொழுது நாம் பார்க்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
தேவையான பொருட்கள்:
- நல்லெண்ணெய் – 5 டேபிள் ஸ்பூன்
- கடுகு – 1/2 ஸ்பூன்
- இஞ்சி – ஒரு பெரிய துண்டு (இடித்தது)
- பூண்டு – 10 பல் (இடித்தது)
- விதை நீக்கிய காய்ந்த மிளகாய் – 12
- கருவேப்பிலை – இரண்டு கொத்து
- மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
- சிக்கன் – 1/2 கிலோ
- உப்பு – தேவையான அளவு
- தேங்காய் – சிறு நிறு துண்டுகளாக நறுக்கியது 1/4 கப்
- தண்ணீர் – 1/4 கப் தண்ணீர்
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
மதுரை ஸ்பெஷல் அயிரை மீன் குழம்பு இப்படி செஞ்சு பாருங்க ஊரே மணக்கும்..!
பள்ளிபாளையம் சிக்கன் செய்முறை:
அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் ஐந்து டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய்யை சூடுபடுத்தவும்.
எண்ணெய் சூடானதும் 1/2 ஸ்பூன் கடுகு செய்து நன்றாக பொரியவிடுங்கள், அதன் பிறகு பொடிதாக நறுக்கிய சின்ன வெங்காயம் 250 கிராம் சேர்த்து வதக்க வேண்டும்.
ஓரளவு வெங்காயம் வதங்கியதும் அதனுடன் இடித்த இஞ்சி மற்றும் பூண்டு இரண்டியும் சேர்த்து வதக்கவும்.
அதன் பிறகு விதை நீக்கிய 12 காய்ந்த மிளகாயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதனுடன் சேர்த்து வதக்கவும்.
பின் இரண்டு கொத்து கருவேப்பிலை இலையை சேர்த்து வதக்குங்கள்.
பிறகு 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கிளறிவிடுங்கள்.
பின் அதனுடன் 1/2 கிலோ சுத்தம் செய்துவைத்துல சிக்கன் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக ஒரு நிமிடம் வரை கிளறி விடுங்கள்.
அதன் பின்பு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்திரும் தேங்காய்யை அதனுடன் சேர்த்து கிளறுங்கள்.
அதன் பிறகு 1/4 கப் முதல் 1/2 கப் வரை தண்ணீர் ஊற்றி அடுப்பை மிதமான தீயில் வைத்து சிக்கனை நன்கு வேகவைக்கவும். தண்ணீர் வற்றியதும் அடுப்பை அணைத்து பொடிதாக நறுக்கிய கொத்தமல்லி இலையை சேர்த்து கிளறிவிடுங்கள்.
அவ்வளவு தான் சுவையான பள்ளிபாளையம் சிக்கன் தயார், ஒரு முறை உங்கள் வீட்டில் ட்ரை செய்து சுவைத்து பாருங்கள் டேஸ்ட் அப்படி இருக்கும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தாறுமாறான சுவையில் விரால் மீன் வறுவல் வீட்டிலேயே செய்வது எப்படி..?
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |