இன்னைக்கு நைட் இந்த தோசையை செஞ்சு பாருங்க.. அப்புறம் அடிக்கடி செய்வீங்க..

Advertisement

பன்னீர் மசாலா தோசை செய்வது எப்படி.?

இட்டலி தோசை இரண்டும் ஒரே மாவில் தான் செய்கிறார்கள். புதிய மாவாக இருந்தால் இட்லி செய்வார்கள். அதுவே பழைய மாவாக இருந்தால் தோசை செய்வார்கள். இந்த தோசையிலே பல வகைகள் உள்ளது. ஆனால் அம வீட்டில் செய்வது வெங்காய தோசை, பொடி தோசை, முட்டை தோசை இது போன்ற தோசைகளை தான் அடிக்கடி செய்வார்கள். இந்த பதிவில் புதுமையான பன்னீர் தோசை செய்வது எப்படி என்று தான் தெரிந்து கொள்ள போகின்றோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

பன்னீர் தோசை செய்ய தேவையான பொருட்கள்: 

பன்னீர்- 150 கிராம்

வெங்காயம்-

தக்காளி-

மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி

கரம் மசாலா தூள் – சிறிதளவு

மிளகு தூள் – சிறிதளவு

மஞ்சள் தூள்- சிறிதளவு

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 தேக்கரண்டி

கேரட் – 1/2 

கொத்தமல்லி – சிறிதளவு

உப்பு- தேவையான அளவு

பச்சை மிளகாய்-

பன்னீர் தோசை செய்முறை:

தோசனா அது மைசூர் மசாலா தோசை தாங்க..! இந்த தோசையை வீட்டுல எப்படி செய்யனும் தெரியுமா..?

பன்னீர் தோசை செய்முறை

முதலில் 150 கிராம் பன்னீரை எடுத்து சீவி கொள்ளவும். அதனுடன் நறுக்கிய வெங்காயம், கேரட், கொத்தமல்லி, தேவையாஅளவு உப்பு, மிளகு தூள் சிறிதளவு, சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும்.

அடுத்து மசாலா செய்வதற்கு அடுப்பில் கடாய் வைத்து அதில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி, அதில் கடுகு சேர்த்து பொரிந்ததும் 2 நறுக்கிய வெங்காயம், 2 தேக்கரண்டி இஞ்சி பூண்டு பேஸ்ட், 2 நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி சிறிதளவு சேர்த்து வதக்கி கொள்ளவும்.

பன்னீர் தோசை செய்முறை

வெங்காயம் வதங்கிய பிறகு நறுக்கிய தக்காளி 1 சேர்த்து வதக்கி கொள்ளவும். தக்காளி சுருங்கிய பதம் வந்தவுடன் மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா தூள், மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி கொள்ளவும். இதனுடன் சீவி வைத்த பன்னீரையும் சேர்த்து வதக்கி கொள்ளவும்.

பன்னீர் தோசை செய்முறை

அடுத்து தோசை கல்லை வைத்து அதில் தோசையை ஊற்ற வேண்டும். அதன் மேலே செய்து வைத்துள்ள மசாலா மற்றும் மிக்ஸ் செய்து வைத்துள்ள பன்னீரையும் சேர்த்து வேக விடவும். மறுபுறம் திருப்பி போட்டு வேக விடவும்.

காலை உணவுக்கு ஏற்ற சூப்பரான கொய்யா சட்னி இப்படி செஞ்சி பாருங்க 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil

 

Advertisement