கோடைகாலத்தில் அடிக்கிற வெயிலுக்கு ஏற்ற மாதிரி குளு குளுன்னு பன்னீர் ரோஸ் ஜெல்லி செய்து சுவைத்து பாருங்கள்..!

Paneer Rose Jelly Recipe in Tamil

பொதுவாக கோடை காலம் வந்து விட்டாலே நம்மால் வெயிலின் தாக்கத்தை பொறுத்து கொள்ள முடியாமல் நாம் தினமும் ஏதாவது ஒரு குளிர்ச்சியான உணவுகளை சேர்த்து கொள்வோம். ஆனால் தினமும் ஒரே மாதிரியான குளிர்ச்சியான உணவுகளை சேர்த்து கொள்வது நமக்கு பிடிக்காது. அதனால் புதிய புதிய உணவுகளை தேடி செல்வோம். அதனால் தான் தினமும் நமது பதிவின் வாயிலாக கோடை காலத்திற்கு ஏற்ற புதிய புதிய உணவுகளை பதிவிட்டு வருகின்றோம். அந்த வரிசையில் இன்றைய பதிவில் பன்னீர் ரோஸ் ஜெல்லி எவ்வாறு செய்வது என்பதை முழுதாக பதிவிட்டுள்ளோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள ரெசிபியை செய்து சுவைத்து பாருங்கள்..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

பன்னீர் ரோஜா ஜெல்லி செய்முறை:

Paneer rose sweet recipe in tamil

மிகவும் எளிமையான முறையில் பன்னீர் ரோஜா ஜெல்லி செய்வது எப்படி என்பதை இங்கு காணலாம். முதலில் இந்த ஜெல்லி செய்வதற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.

  1. பன்னீர் ரோஸ் – 100 கிராம் 
  2. சர்க்கரை – 5 டேபிள் ஸ்பூன் 
  3. ஜவ்வரிசி – 20 கிராம் 
  4. கடல் பாசி – 2 டேபிள் ஸ்பூன் 
  5. தண்ணீர் – தேவையான அளவு

கோடை காலத்தில் எத்தனையோ சர்பத் குடிச்சிருப்பீங்க ஆனா இந்த மாதிரி ஒரு சர்பத்தை குடிச்சிருக்கவே மாட்டீங்க

ஸ்டேப் – 1

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 20 கிராம் ஜவ்வரிசியை சேர்த்து அதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு வேக வைத்து எடுத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப் – 2

அடுத்து நாம் எடுத்து வைத்துள்ள 100 கிராம் பன்னீர் ரோஸ்களின் இதழ்களை மட்டும் பிரித்து எடுத்து தண்ணீர் ஊற்றி நன்கு சுத்தம் செய்து எடுத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப் – 3

பின்னர் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நாம் சுத்தம் செய்து வைத்திருந்த பன்னீர் ரோஜா இதழ்களை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு வேகவைத்து பின்னர் அதில் உள்ள தண்ணீரை மட்டும் வடிகட்டி எடுத்து கொள்ளுங்கள்.

உங்க வீட்ல பிரட் இருக்கா அப்போ கோடை காலத்திற்கு ஏற்ற குளுகுளு குல்ஃபியை வீட்டிலேயே செய்து சாப்பிடலாம்

ஸ்டேப் – 4

Paneer rose recipe in tamil

அடுத்து அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நாம் வடிகட்டி வைத்திருந்த பன்னீர் ரோஜா தண்ணீரை சேர்த்து அதனுடன் நாம் எடுத்து வைத்திருந்த 2 டேபிள் ஸ்பூன் கடல்பாசி, 5 டேபிள் ஸ்பூன் சர்க்கரை மற்றும் நாம் வேக வைத்து எடுத்து வைத்திருந்த 20 கிராம் ஜவ்வரிசி ஆகியவற்றை சேர்த்து நன்கு வேகவிடுங்கள்.

பின்னர் அதனை ஒரு கிண்ணத்தில் ஊற்றி குளிர்சாதன பெட்டியின் உரைப்பானில் 2 மணிநேரம் வைத்து எடுத்து அனைவருக்கும் பரிமாறலாம்.

இப்பொழுது நமது பன்னீர் ரோஸ் ஜெல்லி தயாராகிவிட்டது வாங்க சுவைக்கலாம், நீங்களும் இந்த பன்னீர் ரோஸ் ஜெல்லியை உங்கள் வீட்டில் செய்து சுவைத்து பாருங்கள்.

திராட்சையை வைத்து இவ்வளவு ருசியான ரெசிபி செய்யலாமா இத்தனை நாளா இது தெரியாம போச்சே

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil