பன்னீர் சுக்கா – Paneer Sukka Recipe in Tamil
எவ்வளவு டிஸ் சாப்பிட்டிருப்போம் ஆனால், இந்த டிஸ் சாப்பிட்டு இருக்க மாட்டோம். அது என்ன என்ன தெரியுமா..? அது தான் பன்னீர் சுக்கா செய்ய தெரியுமா..? மட்டன் சுக்கா, சிக்கன் சுக்கா என இதுபோன்ற சுக்கா தெரியும். இது என்ன பன்னீர் சுக்கா. பன்னீர் சுக்கா எப்படி செய்யவேண்டும் என்று பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
Paneer Sukka Recipe in Tamil
தேவையான பொருட்கள்:
ஸ்டேப்: 1
முதலில் ஒரு கடாயில் 1 ஸ்பூன் தனியா, 1 டீஸ்பூன் சீரகம், 1 டீஸ்பூன் சோம்பு, 1/4 ஸ்பூன் வெந்தயம், பட்டை, கிராம்பு, ஏலக்காய் 1 சேர்த்து அதனுடன் 4 வர மிளகாய் சேர்த்து நன்கு வறுத்து ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளலாம்.
ஸ்டேப்: 2
அடுத்து அதே கடாயில் 1 கொத்து கருவேப்பிலை, 1 ஸ்பூன் கசகசா சேர்த்து அதனையும் சரியாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கொண்டக்கடலை வடை செய்வது எப்படி என்பதை பார்ப்போம்
ஸ்டேப்: 3
பின்பு கடாயில் 1 ஸ்பூன் நெய் ஊற்றி, அதில் பன்னீர் குட்டி குட்டியாக நறுக்கி கடாயில் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
ஸ்டேப்: 4
பிறகு நாம் வறுத்து வைத்துள்ள பொருட்களை மிக்சியில் போட்டு கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்வோம். இப்போது பேஸ்ட் ரெடி.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இட்லி, சப்பாத்திக்கு சாப்பிடக் கூடிய பீர்க்கங்காய் கிரேவி செய்யலாம் வாங்க
ஸ்டேப்: 5
அடுத்து இன்னொரு கடாயில் நெய் சேர்த்து அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கொள்ளவும். அதனுடன் 2 பச்சைமிளகாய், இஞ்சி சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும். அதனுடன் நாம் அரைத்து வைத்துள்ள பேஸ்டை அதில் கலந்துவிட்டு தண்ணீர், உப்பு சேர்த்து கலந்துவிட்டு கொஞ்சம் நேரம் மூடி வைக்கவேண்டும்.
ஸ்டேப்: 6
பச்சை தன்மை மாறிய பின்பு நாம் வறுத்து வந்துள்ள பன்னீரை போட்டு அந்த மசாலாவுடன் நன்கு கலந்த பின்பு, சிறிதுநேரம் கழித்து சாப்பிட்டு பாருங்கள் நாக்குல நிற்கும் டேஸ்ட்..!
தேங்காய் இல்லாத சப்பாத்தி குருமா செய்வது எப்படி
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal Kurippugal |