இட்லி மாவு இல்லாமலே சுவையான ரெசிபி அதுவும் 10 நிமிடத்தில் செய்யலாம் வாங்க..!

Advertisement

Paruppu Adai Dosa Recipe in Tamil

சிலரது வீடுகளில் பார்த்தால் எந்நேரமும் இட்லி அல்லது தோசை மாவு இருந்து கொண்டே இருக்கும். அதுவும் கொஞ்சம் தீர்ந்து விடும் நிலைக்கு வந்து விட்டால் கூட உடனே மீண்டும்  மாவு அரைத்து வைத்து விடுவார்கள். ஏனென்றால் இட்லி அல்லது தோசை மாவு இருந்தால் சாப்பாடு செய்வதற்கு எளிமையாக இருக்கும். அதுவே மாவு  இல்லை என்றால் என்ன சாப்பாடு செய்வது என்ற குழப்பம் இருக்கும்.

ஒருவேளை பூரி, சப்பாத்தி, பொங்கல் மற்றும் இடியாப்பம் என இவற்றை எல்லாம் செய்ய சமைக்க தெரிந்து இருந்தாலும் கூட சமைப்பதற்கு நேரம் இல்லாத காரணத்தினால் இட்லி மற்றும் தோசையை பெரும்பாலும் காலை மற்றும் இரவு நேர சாப்பாடாக செய்து விடுகிறார்கள். இத்தகைய காரணத்தினாலேயே எப்போதும் இட்லி மற்றும் தோசை மாவினை அரைத்து வைத்து விடுகிறார்கள். அதனால் இன்று இட்லி மாவு இல்லை என்றாலும் கூட பருப்பு அடை செய்வது எப்படி என்பதை தான் பார்க்கப்போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

 பருப்பு அடை செய்முறை:

பொருட்களின் அளவு  பருப்பு அடை செய்யும் முறை 
கடலை பருப்பு- 1/2 கப்  

முதலில்  இந்த அனைத்தினையும் நன்றாக தண்ணீரில் ஊற வைத்து பின்பு சுத்தம் செய்து வைத்து விடுங்கள்.

துவரம் பருப்பு- 1/4 கப்
அரிசி- 1 கப்
பாசிப்பருப்பு- 1/4 கப்
உளுத்தம் பருப்பு- 1/2 கப்
காய்ந்த மிளகாய்- 6 இப்போது கிரைண்டரில் சுத்தம் செய்து வைத்துள்ள பொருளுடன் மிளகாய், சோம்பு மற்றும் தேங்காய் சேர்த்து மாவினை சற்று கொரகொரப்பாக அரைத்து கொள்ளுங்கள்.
சோம்பு- 2 ஸ்பூன்
துருவிய தேங்காய்- 1 கப்
வெங்கயாம்- 3 கடைசியாக அரைத்து வைத்துள்ள மாவுடன் உப்பு மற்றும் இதர பொருட்கள் அனைத்தினையும் சேர்த்து சிறிதளவு தண்ணீரும் சேர்த்து மாவினை தயார் செய்து கொள்ளுங்கள்.
பச்சை மிளகாய்- 3
உப்பு- தேவையான அளவு
மஞ்சள்தூள்- 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை- சிறிது
எண்ணெய்- தேவையான அளவு பின்பு அடுப்பில் தோசை கல்லை வைத்து அதில் தயார் செய்து வைத்துள்ள மாவில் இருந்து சிறிதளவு எடுத்து அடை போல் ஊற்றி வேக வைத்து எடுக்க வேண்டும்.
பருப்பு அடை ரெடி இதேபோல் மற்ற மாவினையும் ஊற்றி எடுத்தால் பருப்பு அடை தயார்.

veggie garlic noodles recipe in tamil

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்!!!
Advertisement