பாவ் பாஜினா இந்த டேஸ்ட்ல தான் இருக்கனும்..! அப்போ தான் ருசி சும்மா ஆள தூக்கும்..!

Advertisement

Pav Bhaji Recipe 

உங்களுக்கு மாலை நேர பொழுதில் ஏதேனும் வித்தியாசமான ரெசிபி சாப்பிட வேண்டும் என்றால் இன்றைய பதிவு உங்களுக்கு மிகவும் நன்மை அளிக்கக்கூடிய ஒன்றாக இருக்கும். ஏனென்றால் இன்று பெரும்பாலான நபர்கள் சாப்பிட்டு இருக்க முடியாது பாவ் பாஜி எப்படி செய்வது என்று தான் தெரிந்துக்கொள்ள போகிறோம். சிலர் பாவ் பாஜி சாப்பிட்டு இருப்பார்கள். ஆனால் வீட்டில் செய்வது எப்படி என்று தெரியாமல் இருக்கும். அதனால் இன்று சுவையான பாவ் பாஜி வீட்டிலேயே எப்படி செய்வது என்று தெரிந்துக்கொள்ளலாம் வாங்க நண்பர்களே..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👉 https://bit.ly/3Bfc0Gl

பாவ் பஜ்ஜி செய்வது எப்படி.?

  • கேரட்- 2
  • பீன்ஸ்- 10 
  • காலிபிளவர்- 1 கப் 
  • உருளை கிழங்கு- 2
  • பச்சை பட்டாணி- 1/2 கப் 
  • வெண்ணெய்- 3 ஸ்பூன் 
  • சீரகம்- 1/2 ஸ்பூன் 
  • வெங்காயம்- 1
  • தக்காளி- 3
  • பச்சை மிளகாய்- 2
  • இஞ்சி பூண்டு பேஸ்ட்- 1/2 ஸ்பூன்
  • மஞ்சள்தூள்- 1/2 ஸ்பூன் 
  • சீரகத்தூள்- 1/2 ஸ்பூன் 
  • மல்லித் தூள்- 1 ஸ்பூன் 
  • மிளகாய் தூள்- 1 ஸ்பூன் 
  • எலுமிச்சை பழம்- 1/2 
  • உப்பு- தேவையான அளவு 
  • மல்லி இலை- தேவையான அளவு 
  • பன்- தேவையான அளவு 

பாவ் பாஜி செய்வதற்கு மேலே சொல்லப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தினையும் சரியான அளவில் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

எப்போதும் போல் சட்னி செய்யாமல் கர்நாடகா ஸ்டைல் சட்னி செய்து கொடுங்கள் 

செய்முறை:

முதலில் எடுத்துவைத்துள்ள காய்கறிகள் அனைத்தினையும் நன்றாக தண்ணீரில் அலசி அதன் பிறகு சிறு சிறு துண்டாக நறுக்கி வைத்து கொள்ள வேண்டும்.

அதன் பிறகு அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு கடாயில் தண்ணீர் சேர்த்து நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் தக்காளியினை தவிர மற்ற அனைத்தினையும் வேக வைத்து கொள்ள வேண்டும்.

பாவ் பஜ்ஜி செய்வது எப்படி

அடுப்பில் உள்ள காய்கறிகள் அனைத்தும் நன்றாக வெந்த பிறகு அதனை கரண்டியால் வைத்து மசித்து கொள்ளுங்கள்.

இப்போது அடுப்பில் மற்றொரு கடாயினை வைத்து அதில் 3 ஸ்பூன் எண்ணெயினை சேர்த்து இதோடு 1/2 ஸ்பூன் சீரகம், நறுக்கிய 1 வெங்காயம், 1/2 ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் எடுத்துவைத்துள்ள மற்ற மசாலா பொருட்களையும் இதனுடன் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளுங்கள்.

கடாயில் உள்ள பொருட்கள் அனைத்தும் நன்றாக வதங்கிய பிறகு அதனுடன் நறுக்கிய தக்காளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து 2 நிமிடம் அப்படியே வேக விடுங்கள்.

2 நிமிடம் கழித்து கடாயில் உள்ள மசாலாவுடன் வேக வைத்து மசித்து வைத்துள்ள காய் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து மீண்டும் நன்றாக கெட்டியாக மாறும் வரை வேக விடுங்கள்.

கடைசியாக மசாலா கெட்டியான பதத்திற்கு வந்தவுடன் அடுப்பை அணைத்து விட்டு கீழே இறக்கி வைத்து 1/2 எலுமிச்சை சாறு மற்றும் மல்லி இலை தூவி விடுங்கள். இப்போது சுவையான பாவ் பாஜி தயார்.

நீங்கள் தயார் செய்து வைத்துள்ள பாவ் பாஜியில் பன்னை வைத்து தொட்டு சாப்பிட்டால் அவ்வளவு ருசியாக இருக்கும்.

இட்லி, கல் தோசைக்கு ஏற்ற கூரை கடை சட்னி செய்து சாப்பிடுங்கள் 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal Kurippugal
Advertisement