Peanut Rice Recipe in Tamil
பொதுவாக வீட்டில் உள்ள பெண்களுக்கு வீட்டில் உள்ள அனைத்து வீட்டு வேலைகளை காட்டிலும் மிக மிக கடினமான வேலை என்றால் அது வீட்டில் உள்ளவர்களுக்கு சமையல் செய்வது தான். அதிலும் குறிப்பாக மதிய உணவு சமைப்பது என்பது மிக மிக கடினமான வேலை ஆகும். அதிலும் குழந்தைகள் உள்ள வீடுகளில் அவர்களுக்கு பிடித்தவாறு ஏதாவது ஒரு மதிய உணவு செய்து அவர்களை சாப்பிட வைப்பதற்குள் நமது பாடு பெரும்பாடாக மாறிவிடும். இதில் நாம் மதியம் சமைப்பதற்கு முக்கியமாக தேவைப்படும் மூலப்பொருளான காய்கறிகள் இல்லை என்றால் நமது பாடு திண்டாட்டம். அதனால் தான் இன்றைய பதிவில் வீட்டில் காய்கறிகள் இல்லாத நேரத்தில் மிகவும் குறைந்த நேரத்தில் மிகவும் சுவையான வேர்க்கடலை சாதம் செய்வது எப்படி என்பதை பற்றி விரிவாக அறிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
வேர்க்கடலை சாதம் செய்வது எப்படி.?
பொதுவாக நாம் அனைவருக்குமே நமது மதிய உணவு மிகவும் சுவையானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும் என்று நினைப்போம். அதனால் தான் மிகவும் சுவையான ஆரோக்கியமான வேர்க்கடலை சாதம் செய்வது எப்படி என்பதை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க.
தேவையான பொருட்கள்:
- சாதம் – 2 கப்
- வேர்க்கடலை – 4 டேபிள் ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
- கடலை பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
- சீரகம் – 1/2 டேபிள் ஸ்பூன்
- வெள்ளை எள்ளு – 1 டேபிள் ஸ்பூன்
- காய்ந்த மிளகாய் – 4
- தேங்காய்துருவல் – 2 டேபிள் ஸ்பூன்
- கடுகு – 1 டேபிள் ஸ்பூன்
- கருவேப்பிலை – 1 கொத்து
- எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
ஆந்திர ஸ்பெஷல் கோங்குரா மட்டன் இப்படி ஒருமுறை செய்து சுவைத்து பாருங்க
செய்முறை:
ஸ்டேப் – 1
முதலில் அடுப்பில் ஒரு கடையை வைத்து அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்யை ஊற்றி அதில் 2 டேபிள் ஸ்பூன் வேர்க்கடலை, 1 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு, 1 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு, 1/2 டேபிள் ஸ்பூன் சீரகம், 1 டேபிள் ஸ்பூன் வெள்ளை எள்ளு மற்றும் 4 காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்கு வறுத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 2
அதனுடனே 2 டேபிள் ஸ்பூன் தேங்காய்துருவலை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள். பின்னர் இதனை நன்கு சூடு ஆறவைத்து ஒரு மிக்சி ஜாரில் போட்டு நன்கு அரைத்து கொள்ளுங்கள்.
உங்க வீட்டுல பிரெட் இருக்க அப்போ இந்த ஸ்னாக்ஸ் ரெசிபியை செய்து சுவைத்து பாருங்க
ஸ்டேப் – 3
அடுத்து அடுப்பில் ஒரு கடையை வைத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்யை ஊற்றி அதில் 1 டேபிள் ஸ்பூன் கடுகு, 1 கொத்து கருவேப்பிலை மற்றும் 2 டேபிள் ஸ்பூன் வேர்க்கடலை ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 4
பிறகு அதனுடன் 2 கப் சாதம், நாம் அரைத்து வைத்துள்ள மசாலா பொடி மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து இறக்கினால் நமது சுவையான மற்றும் ஆரோக்கியமான வேர்க்கடலை சாதம் தயாராகிவிடும்.
1 கப் அவல் வைத்து செய்யும் இந்த ரெசிபி ஒன்று போதும் உங்க இரவு உணவை இனிமையாக்க
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள்!!! |