இட்லி, சப்பாத்திக்கு சாப்பிடக் கூடிய பீர்க்கங்காய் கிரேவி செய்யலாம் வாங்க…!

Advertisement

Peerkangai Gravy in Tamil

நமது வீட்டின் இல்லத்தரசிகளுக்கு குழம்பு வைப்பது பெரிய பிரச்சனையாக நினைக்கிறார்கள். நம் வீட்டில் ஒதுக்கப்படும் காயாக பீர்க்கங்காய் உள்ளது.  பீர்க்கங்காயில் பல வகையான சத்துக்களை கொண்டது. அதிலும் இது பல நோய்களுக்கு மருந்தாக உள்ளது. இது உடல் எடை குறைப்பு, ரத்த சர்க்கரை நோய், இரத்த சோகை போன்ற நோய்களுக்கு பெரிதும் உதவுகிறது. இந்த காயை யாரும் விரும்பி சாப்பிட மாட்டார்கள். அதனால் எல்லோருக்கும் பிடிக்கும் அளவிற்கு  பீர்க்கங்காய் கிரேவி செய்வதை பற்றி முழுமையாக பார்த்து தெரிந்து கொள்வோம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

பீர்க்கங்காய் கிரேவி செய்ய தேவையான பொருட்கள் : 

  • பீர்க்கங்காய் – 2
  • எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
  • கடலை பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
  • வெள்ளை உளுந்த பருப்பு  – 1/2 டேபிள் ஸ்பூன்
  • சீரகம் – 1/2 டேபிள் ஸ்பூன்
  • கடுகு –  1/2 டேபிள் ஸ்பூன்
  • வெங்காயம் – 1
  • பச்சை மிளகாய் – 2
  • பூண்டு – சிறிதளவு
  • கருவேப்பிலை – சிறிதளவு
  • மஞ்சள் தூள் – 1/ 4 டேபிள் ஸ்பூன்
  • கரம் மசாலா தூள் – 1/2 டேபிள் ஸ்பூன்
  • தனியா தூள் – 1டேபிள் ஸ்பூன்
  • தேவையான அளவு – உப்பு
  •  பால்- 1 கப்
  • கொத்தமல்லி – சிறிதளவு

கோவக்காய் கிரேவி இப்படி செஞ்சு பாருங்க..! செம டேஸ்டா இருக்கும்..

பீர்க்கங்காய் கிரேவி செய்முறை:

ஸ்டெப் : 1

 Peerkangai Recipe in Tamil

முதலில்  பீர்க்கங்காயை அலசி எடுத்து கொள்ளவும். பிறகு பீர்க்கங்காயின்  மேல் இருக்கும் பச்சை தோலினை சீவி எடுக்க வேண்டும். அதனை சின்ன சின்னதாக பீர்க்கங்காயை வெட்டி எடுத்து கொள்ள வேண்டும்.

ஸ்டெப்: 2 

பீர்க்கங்காய் கிரேவி செய்வது எப்படி

ஒரு கடாயை எடுத்து கொள்ளவும். அதில் எண்ணெய் ஊற்றி சூடாக, பின்பு அதனுடன் கடலை பருப்பு, வெள்ளை உளுந்து, சீரகம், கடுகு போன்ற பொருட்களை சேர்த்து நன்றாக பொரியும் வரை வதக்கவும். அதன் பின் வெங்காயம் பச்சை மிளகாய், இடிச்சி வைத்த இஞ்சி மற்றும் கருவேப்பிலை சேர்த்த நன்றாக வதக்கவும். பின்பு கட் பண்ணி வைத்திருந்த பீர்க்கங்காயை சேர்த்து எண்ணெயில் 2 நிமிடம் வேக வைக்கவும். அதன் பின்பு ஒரு மூடி போட்டு கொஞ்சம் நேரம் அப்படியே வைக்கவும்.

ஸ்டெப் : 3

 Peerkangai Recipe in Tamil

பீர்க்கங்காய்க்கு தேவையான மசாலாவை சேர்க்க வேண்டும். அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, தனியா தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்க வேண்டும். பீர்க்கங்காயில் உள்ள மசாலாவின் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின்பு காய்ச்சின பாலை அதனுடன் ஊற்றி நன்றாக கலக்கவும். இதனை 2 நிமிடம் மூடி போட்டு மூடவும்.

கடைசியாக சிறிதளவு கொத்தமல்லி சேர்த்து இறக்கினால்  சுவையான பீர்க்கங்காய் கிரேவி ரெடி.

பூண்டு ஃப்ரைட் ரைஸ் (Garlic fried rice ) & காளான் கிரேவி செய்முறை..!

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal Kurippugal
Advertisement